📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 05, 2026 03:00 PM

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு அதிக பிரசங்கித்தனம்

பிரவீன் சக்கரவர்த்தி பதிவு அதிக பிரசங்கித்தனம்

மாநிலங்களவை எம்.பி. இடம் காங்கிரசுக்கு த.வெ.க. விட்டுக்கொடுத்தது. இதையடுத்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இதையடுத்து பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.

கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.