பல கோடிகளுக்கு போட்ட பிளான்.. புஸ்வானம் ஆகிடுச்சேனு கவலையில் நடிகை.. சுபத்தில் முடிந்த பிரச்னை
சென்னை: கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்ட குடும்ப விவகாரம் தற்போது சுமுகமாக முடிவுக்கு வந்திருப்பதுதான் பரபரப்பான தகவல்களாக பேசப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைக்கு எதிர்பாராத ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அந்த நடிகரின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து செல்லும் சூழல் உருவாகிவிட்டதாக நீண்ட நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், அந்த நடிகருடன் அடிக்கடி இணைந்து காணப்பட்ட நடிகையைச் சுற்றியும் ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இருவருக்கும் தொழிலைத் தாண்டிய நெருக்கம் இருப்பதாகவும், அந்த நெருக்கம் எதிர்காலத்தில் இன்னும் பல பெரிய வாய்ப்புகளாக மாறும் என்றும் பலரும் யூகித்து பேசினர்.
அதே நேரத்தில், அந்த நடிகரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அவருடன் நெருக்கமாக இருப்பது சினிமா வாய்ப்புகள் மட்டுமல்லாமல், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று நடிகை தரப்பு கணக்கு போட்டிருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் பல விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையும் இருந்ததாக பேசப்பட்டது.
மொத்தமாக மாறிய சூழல்: ஆனால் தற்போது சூழல் முற்றிலும் மாறியிருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்து, குடும்பம் மீண்டும் பழையபடி இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக பரவி வந்த பல யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றத்தால், நடிகையை மையமாக வைத்து பேசப்பட்ட எதிர்பார்ப்புகளும் ஒரே நொடியில் மாறிப்போய்விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியுள்ளது. இனி அந்த நடிகரின் வாழ்க்கையில் முன்பைப் போல முக்கிய இடம் கிடைக்குமா, அவர் நினைத்த திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வருமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பக்கா பிளானா?: அதேநேரத்தில் இந்த குடும்பப் பிரச்னைகள் எல்லாம் நடிகரின் சினிமா கடந்த அடுத்த கட்ட வளர்ச்சிக்காக திட்டமிட்டு போடப்பட்ட பிளான் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் நடிகருக்குத்தான் நல்ல லாபம் என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.