📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 22, 2026 12:03 AM

Jailer 2 First Review: ஜெயிலர் 2 முதல் விமர்சனம்.. சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் வேலை.. நெல்சன் சம்பவம்!

Jailer 2 First Review: ஜெயிலர் 2 முதல் விமர்சனம்.. சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் வேலை.. நெல்சன் சம்பவம்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஜெயிலர் 2 அடுத்த மாதம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது.

அனிருத் இசையில் வெளியான அல்லபோலேலோ பாடல் ஏற்கனவே மாஸ் ஹிட் அடித்த நிலையில், ஹுகும் ஸ்டைலில் ஒரு பாடலுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஜெட் ஸ்பீடில் தினமும் படத்தில் இருந்து ஒவ்வொரு கேரக்டர்களாக அறிமுகப்படுத்தி வருகிறது சன் பிக்சர்ஸ். இந்நிலையில், படத்தின் முதல் விமர்சனம் குறித்த இன்சைடு ரிப்போர்ட்டுகள் சில கசிந்துள்ளன. அதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

ஜெயிலர் 2 கதை இதுதானா?: டைகர் முத்துவேல் பாண்டியனாக மீண்டும் சூப்பர் ஸ்டார் தனது ஸ்னைபர் படையுடன் பக்காவாக களமிறங்க காத்திருக்கிறார். ஜெயிலர் படத்தில் தனது மகனை வில்லன் விநாயகம் கடத்தி வைக்க அவனிடம் இருந்து மகனை காப்பாற்ற போராடும் தந்தை, இறுதியில் இந்த சதி வேலையை செய்ததே மகன் வசந்த் ரவி தான் என்பதை அறிந்து மகனையும் போட்டுத் தள்ளுவது தான் ஜெயிலர் படத்தின் கதை.

அத்துடன் வில்லன் விநாயகத்தை கொல்லும் போது, இந்த கேங் ரொம்பவே பெரியது என்றும் என்னை அழித்து விட்டால், உன்னை எனக்கு மேல இருக்கவங்க சும்மா விடமாட்டாங்க என சொல்லியிருப்பார். அதை லீடாக வைத்தே நெல்சன் படத்தை உருவாக்கி உள்ளார் என்கின்றனர்.

இப்படியொரு ட்விஸ்ட் இருக்கா?: ஜெயிலர் படத்தில் ஒரே ஒரு வில்லன் தான். அவனை அழிக்க ரஜினிகாந்துக்கு மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என பல பிரபலங்கள் ஒன்றுக்கூடி உதவி செய்வார்கள். இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் அதை அப்படியே டோட்டலாக மாற்றி வில்லன் போர்ஷனை வெயிட்டாக்க வேண்டும் என்பதற்காக ஒரு வில்லனுக்கு பதில் ஏகப்பட்ட வில்லன்களை நெல்சன் தரமாக இறக்கி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, விஜய் சேதுபதி என பல வில்லன்களை சூப்பர் ஸ்டார் எப்படி சுக்குநூறாக காலி செய்யப் போகிறார் என்பது தான் கதை என்கின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு சில மல்டி ஸ்டார் ஹீரோக்கள் உதவ முன் வருவார்களா? அல்லது அவர்களால் முடியாத நிலை உருவாக சூப்பர் ஸ்டாரே அனைத்தையும் செய்து முடிக்கப் போகிறாரா? என்பது தான் ஹைலைட் என்கின்றனர்.