பள்ளிகளில் கழிப்பறை சுகாதாரம் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்
பள்ளிகளில் கழிப்பறை சுகாதாரம் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்
Google News Tamil Healthகோவை: அரசுப் பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பு, கழிப்பறை வசதிகளின் சுகாதார நிலை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்த வேண்டும் என இந்து இளைஞர் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
மாவட்டத்தில் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை என, 1,212க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் பல இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன.
சில துவக்க பள்ளிகளில் இன்னும் கழிப்பறை வசதி இல்லை. பல அரசுப் பள்ளிக் கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன. அவற்றின் தரம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. வேதியியல், இயற்பியல் பாடங்களுக்கான ஆய்வக உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, கோவை கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.