📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 09, 2026 02:03 PM

பலவீனமான அமெரிக்க டாலரால் தங்கம் விலை அதிகரிப்பு

பலவீனமான அமெரிக்க டாலரால் தங்கம் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியிருப்பதால் ஏற்பட்ட பணவீக்கக் கவலைகளால் பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலரால் மூன்று நாள் சரிவுக்குப் பிறகு தங்கம் விலை சற்றே கூடியது.

கடந்த மூன்று வர்த்தகங்களில் 2.6 விழுக்காடு சரிந்த நிலையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) தங்கத்தின் விலை 0.7 விழுக்காடு வரை கூடியது. இந்த வாரம் அமெரிக்க டாலர் மதிப்பு சுமார் 0.4 விழுக்காடு சரிந்துள்ளதால், பல வாடிக்கையாளர்களுக்குத் தங்கத்தின் விலை குறைவாகக் கிடைக்கிறது.

அமெரிக்கப் போர்க்கப்பல் மீதான ஏவுகணைத் தாக்குதல் முயற்சிக்கு பதிலடியாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற ஐந்து ஈரானிய கொள்கலன் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்தன. இது, பல மாதங்களாக நடைபெற்று வரும் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை, எரிபொருள் செலவுகளை அதிகரித்து பணவீக்கத்தை அதிகமாய் வைத்திருக்கக்கூடும் என்ற கவலையை தீவிரப்படுத்தியுள்ளதாக ‘மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தின் ஆய்வாளர் மனவ் மோடி தெரிவித்துள்ளார்.

“இருப்பினும், ஜப்பானிய யென் மதிப்பு ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு வலுவடைந்ததால் அமெரிக்க டாலர் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தது. இது தங்கத்தின் விலை உயர்வுக்கு ஆதரவாக இருந்தது,” என்றார்.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 100 அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளதால், எண்ணெய் விலையின் ஏற்றம் தொடர்கிறது.

இது செப்டம்பர் 14-15 தேதிகளில் நடைபெறவுள்ள மத்திய வங்கியின் கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.

ஏமனில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் செப்டம்பர் 8 அன்று பல சவூதி நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். இது, அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், அமெரிக்கப் படைகள் பல ஈரானிய எண்ணெய் டேங்கர்களைத் தாக்கின. மேலும் ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

செப்டம்பர் 9 அன்று எண்ணெய் விலைகள் தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்து, ஆரம்பக்கட்ட வர்த்தகத்தில் ஓர் அமெரிக்க டாலருக்கும் மேல் அதிகரித்தன.