📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 07, 2026 04:31 PM

PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?

PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?

PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?

சாலையோர வியாபாரிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் சில சலுகைகளுடன் கடன் தொகையும் வழங்குகிறது. அப்படியான ஒரு திட்டம் தான் பிரதமர் ஸ்வநிதி திட்டம். அதனைப் பற்றிக் காணலாம்.

பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த தெருவோர வியாபாரி சுப.தேசியமணி என்பவருக்கு பிரதமர் மோடி கடிதம் ஒன்றை அனுப்பி பெருமைப்படுத்தியுள்ளது. அந்த கடன் திட்டம் பற்றிக் காணலாம்.

பிரதமர் ஸ்வநிதி கடன் திட்டம்

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காய்கறி,பழங்கள் விற்பனை தொடங்கி உணவு வரை சாலையோரங்களில் நமக்கு கிடைக்கிறது. இப்படியான வியாபாரிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் சில சலுகைகளுடன் கடன் தொகையும் வழங்குகிறது. அப்படியான ஒரு திட்டம் தான் பிரதமர் ஸ்வநிதி திட்டம்.

இந்த திட்டம் மத்திய பாஜக அரசால் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவையொட்டு பிரதமர் மோடி இதன்மூலம் பயனடைந்தவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த வியாபாரி தேசியமணிக்கு பாராட்டு கடிதம் அனுப்பினார். இந்த திட்டம் என்ன மாதிரியான பலன்களைக் கொண்டது என்பது பற்றிக் காணலாம்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

இந்த திட்டத்தில் ரூ.50 ஆயிரம் வரை பிணையில்லா கடன் கிடைக்கும். ஆனால் அது முதல் தடவை கிடைக்காது. முதல் முறை விண்ணப்பிக்கும்போது ரூ.10 ஆயிரம் கடன் தொகை, 12 மாதத்தில் திருப்பி செலுத்தும் காலத்துடன் கொடுக்கப்படும். இதனை சரியாக செலுத்தினால் இரண்டாவது முறை விண்ணப்பிக்கும்போது ரூ.25 ஆயிரம் கடன் 18 மாத கால திருப்பி செலுத்துதல் அவகாசத்துடனும், மூன்றாவது தவணை ரூ.50 ஆயிரம் 36 மாத கால அவகாசத்துடனும் வழங்கப்படும்.

Also Read: 8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

கடனைச் சரியான நேரத்திலோ அல்லது முன்கூட்டியோ வழங்கினால் வட்டியில் மானியம் வழங்கப்படும். அவை பயனாளர்களின் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிலும் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.100 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படும்.

இந்த கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தினால் யுபிஐ உடன் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டு கிடைக்கும். இது அன்றாட செலவுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை அவசர கடன் வழங்கும் வகையில் இருக்கும்.

தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சார்ந்த அடையாள ஆவணங்கள், புகைப்படம் போன்றவற்றுடன் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட வியாபாரச் சான்றிதழ் அல்லது புதிய வியாபாரிகளுக்கு பரிந்துரை கடிதம் ஆகியவை அவசியமானதாகும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது கூட்டு நிறுவனங்கள் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். PM SVANidhi திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி