📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 31, 2026 06:33 PM

போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்

போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்

சென்னை: சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்வில் பட்டு வேஷ்டி சட்டையுடன் பங்கேற்ற விஜய்,போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களை வழங்கினார். 665 அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதிக்கான பதக்கங்களை முதல்வர் விஜயிடம் இருந்து, டிஜிபி வன்னியபெருமாள், பாலநாகதேவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஐஜி மகேஷ்வரியும் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.