📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 23, 2026 12:30 PM

நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்!

நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்!

நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?

தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நள்ளிரவில் மின்வெட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மக்களின் அத்தியாவசிய விஷயங்களில் ஒன்றாக மின்சாரம் உள்ளது. கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும். இதனால், இந்த காலகட்டங்களில் மின்சாரத்தின் தேவை மிக அதிகளவு இருக்கும்.

நள்ளிரவில் தொடரும் மின்தடை:

இந்த சூழலில், தமிழ்நாட்டின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மின்தடை அதிகளவு இருந்து வருகிறது. குறிப்பாக, பல இடங்களில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. சென்னையின் பல இடங்களிலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் மின்தடை தினசரி அரங்கேறி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப்பொறுப்பேற்ற சில நாட்களிலே இந்த மின்தடை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால், இரவில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதிகாரிகள் அலட்சிய பதில்:

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் மக்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் கேட்டபோது சில இடங்களில் அதிகாரிகள் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் பதிலளித்துள்ளனர். ஒரு இடத்தில் அதிகாரி ஒருவர் மின்தடை குறித்து கேட்ட பொதுமக்களிடம் முதலமைச்சர் விஜய்யிடம் போய் கேளுங்க என்று மக்களிடம் அலட்சியமாக பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் நிர்மல்குமார்?

ஆளுங்கட்சி தனது அமைச்சரவையை நேற்றுதான் முழுமை செய்துள்ள நிலையில், விஜய் அரசுக்கு முதல் சவாலாக இந்த மின்தடை உருவாகியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் அரங்கேறும் இந்த மின்தடை ஏற்படாமல் இருக்கவும், அவ்வப்போது பல இடங்களில் மழை பெய்வதால் ஏற்படும் மின்தடையை உடனடியாக சரி செய்யவும் பணியாளர்களையும், அதிகாரிகளையும் துரிதமாக பணி செய்ய அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2006 - 2011ம் ஆண்டு நடந்த திமுக ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு மின்வெட்டு இருந்தது. அடுத்து நடந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததற்கு இந்த மின்தடை முக்கிய காரணமாக இருந்தது. தவெக அரசின் தொடக்கத்திலே அவர்களுக்கு இந்த மின்தடை சவாலாக மாறியிருக்கும் சூழலில், இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.