📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 16, 2026 03:34 PM

படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி

படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி

படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை! காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடைசி தேதி எப்போது தெரியுமா?

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, ஜூலை 23-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவித்துள்ளார்."

காஞ்சிபுரம் மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை மற்றும் தேசிய நலக்குழுமம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் மாவட்ட நலச்சங்கம் (District Health Society) மூலமாகப் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காரப்பேட்டையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணியின்கீழ் தியேட்டர் டெக்னிஷியன் (Theatre Technician), ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் (Occupational Therapist), ஸ்டெரிலைசேஷன் ஆபரேட்டர் (CSSD Technical Assistant), பிளட் பேங்க் கவுன்சிலர் (Blood Bank Counsellor), அலுவலக உதவியாளர் (Office Assistant), ஆண்/பெண் நர்சிங் உதவியாளர்கள் (Female/Male Nursing Assistant), தோபி (Dhobi), டயட்டீஷியன் (Dietician) மற்றும் ரேடியோகிராஃபர் (Radiographer) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை https://kancheepuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சுய சான்றொப்பமிட்ட (Self-Attested) தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 23.07.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி