பட்டாசு சத்தம் கேட்டு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை... தனி ஆளாக விரட்டிய வீரப்பெண்
வேளாங்கண்ணி ஆலய திருவிழா
அதன் சத்தம் கேட்டு மிரண்டு போன சிறுத்தை, அங்குள்ள தர்மா என்பவரது வீட்டுக்குள் திடீரென புகுந்தது. அங்கு கட்டிலுக்கு அடியில் புகுந்து பதுங்கி இருந்தது. இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுத்தையை விரட்ட முயன்றனர்.
வெளியே ஓடிய சிறுத்தை..
பின்னர் தர்மாவின் தாய் பூஜம்மாள் (வயது 60), பயப்படாமல் கையில் கம்பை வைத்து கொண்டு சத்தமிட்டு சிறுத்தையை விரட்டினார். இதனால் சிறுத்தை வீட்டில் இருந்து வெளியே ஓடி, புதருக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டுக்குள் சிறுத்தை புகுந்ததால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சிறுத்தைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நட வடிக்கை எடுக்காமல் உள்ளனர். மனித-வனவிலங்கு மோதலில் உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர், நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்றனர்.
கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 15-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊருக்குள் சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திரா நகர் மக்கள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.