📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 03, 2026 10:32 AM

பும்ரா நீக்கம்.. ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளருக்கு முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு

பும்ரா நீக்கம்.. ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளருக்கு முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு

பும்ரா நீக்கம்.. ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளருக்கு முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபிக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஜஸ்பிரித் பும்ராவின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவர் இந்த காயத்தில் இருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவரது காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், அவருக்கு முழுமையாக ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் இலங்கை டெஸ்ட் தொடரில் முதலில் சேர்க்கப்பட்ட பும்ரா தற்போது நீக்கப்பட்டு இருக்கிறார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.

பும்ராவுக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபியை பிசிசிஐ தேர்வுக் குழு மாற்று வீரராக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் முதல் முறையாக இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை சீசன்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆகிப் நபி அசத்தியுள்ளார். குறிப்பாக, 2025-26 ரஞ்சி கோப்பை சீசனில் மட்டும் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வெல்ல முக்கியப் பங்காற்றினார்.

மேலும், சில வாரங்கள் முன்பு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட 'இந்தியா ஏ' அணியிலும் இடம் பெற்றிருந்த அவர், இரண்டு முதல்தர போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தித் தனது திறமையை நிரூபித்தார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் இருக்கும் ஆகிப் நபிக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை டெஸ்ட் தொடருக்கான மாற்றி அமைக்கப்பட்ட இந்திய அணி விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சாரன்ஷ் ஜெயின் மற்றும் ஆகிப் நபி.