“புரிந்தால் நான் தோற்றுவிட்டேன்”
“புரிந்தால் நான் தோற்றுவிட்டேன்” – மெல்பன் திரைப்பட விழாவிற்கு வரும் இயக்குனர் கௌதம்
பெர்லின் திரைப்பட விழாவில் இடம்பெற்ற தமிழ்த் திரைப் படமான 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' (Members of the Problematic Family), இந்த ஆண்டு மெல்பன் இந்தியத் திரைப்பட விழாவின் (IFFM) தொடக்கப் படமாகத் திரையிடப்படுகிறது. ஆகஸ்ட் 14 அன்று நடைபெறும் அந்த ஆஸ்திரேலியத் திரையரங்கு அறிமுகத்தில் இயக்குநர் R. கௌதமும் முன்னணி நடிகர் கருத்தடையானும் கலந்துகொள்கின்றனர். ஒரு இறுதிச்சடங்கையும், முரண்களும் சிக்கல்களும் நிறைந்த ஒரு குடும்பத்தையும் துணிச்சலுடன் விவரிக்கும் இந்தப் படத்தைப் பற்றியும், தன்னை உருவாக்கிய இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்துகொள்கிறார் R. கௌதம்.
"If You Understood It, I've Failed" – IFFM 2026 opening movie director, R. Gowtham