📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 21, 2026 06:31 PM

”புறம்போக்கை போல பேசும் உதயநிதி…”

”புறம்போக்கை போல பேசும் உதயநிதி…”

”புறம்போக்கை போல பேசும் உதயநிதி…” – வெளுத்து வாங்கிய நாஞ்சில் சம்பத்..!

தவெக அரசு 100 ஆவது நாளை தொட உள்ள நிலையில், குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து நாஞ்சில் சம்பத் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கவிழும் என்ற விமர்சனத்தையும் மறுத்த அவர், , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்தும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

”ஜெயலிதாவின் மறைவிற்கு பிறகு கலைஞரின் மறைவிற்கு பிறகு ஒரு தலைவனை தேடினார்கள். ஒரு அரசியல் மாற்றத்தையும் ஆட்சி மாற்றத்தையும் எதிர்பார்த்தார்கள். அந்த தேடிய தலைவன் விஜயாக அவர்கள் கண்ணுக்கு தெரிந்தார்கள். ஆட்சி மாற்றத்தை அரசியல் மாற்றத்தை உருவாக்க போகிற நாயகன் இவன்தான் என்று நம்பினார்கள்.

ஆயிரம் ரூபாய் வெள்ளி மூக்குத்தி வாங்குவதற்கு வாய்ப்பில்லாத சகோதரிகள் தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் இருப்பார்கள். ஆனால் அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு வெள்ளியினால் செய்த நாற்காலி பரிசளிக்கப்பட்டது. அந்த நாற்காலியில் அண்ணன் ஸ்டாலின் உட்கார மாட்டார் என்று நான் நினைத்தேன். ஆனால் உட்கார்ந்துவிட்டார்” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பார்டிஃண்ட்னு சொன்ன உடனே இவங்களுக்கு ஆத்திரம் வருதில்ல. எதிர்கட்சி தலைவர் என்பது ஷேடோ கவர்மென்ட். ஆட்சி கவிழக்கூடிய நிலைமை ஏற்படுமானால் நிழல் அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற உதயநிதியை தான் ஆட்சி அமைக்க கவர்னர் கூப்பிடணும். அவ்வளவு பெரிய பொறுப்பில இருக்கிறவர் ஒரு புறம்போக்கை போல பேசுவது என்னால ஜீரணிக்க முடியல.

கடந்த ஆட்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த பொழுது 300 கோடி ரூபாய் வரைக்கும் வசூலித்தாக தகவல் வருகிறது. அதை வாங்கி கொடுத்த தரகன் இன்றைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார். எங்க ஆட்சிக்கு என்ன ஆபத்து வந்துரும்? 121 பேர் ஆதரவை பெற்றுதான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி ஆறு மாத்தில் கவிழ்ந்து விடும் என்று ஒரு மனநோயாளி கூட சொல்ல மாட்டான், ஆனால் ஸ்டாலின் சொல்லுகிறார்” என்று நாஞ்சில் சம்பத் காட்டமாக விமர்சித்தார்.

முழு நேர்காணலை காண: https://www.youtube.com/watch?v=evbrY57rdrw