📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 05:31 PM

பவர் நடிகருக்கு நிகராக.. பந்தய நடிகருக்கு சம்பளம் கொடுக்க ரெடி.. ஆனால் பிரச்னை அது ஒன்னுதான்

பவர் நடிகருக்கு நிகராக.. பந்தய நடிகருக்கு சம்பளம் கொடுக்க ரெடி.. ஆனால் பிரச்னை அது ஒன்னுதான்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரை மீண்டும் பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நடிகரின் மார்க்கெட் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதால், அவர் கேட்கும் சம்பளத்தை வழங்கவும் தயாரிப்பாளர்கள் தயங்கவில்லை என்றும், ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகி வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

பந்தய நடிகரான அந்த நடிகர், தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் அதிக வசூல் ஈர்க்கும் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பதால், அவரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை பல நிறுவனங்களுக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக பல கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் சம்பளத் தொகையை எப்படி வழங்குவது என்பதில்தான் முக்கிய சிக்கல் இருப்பதாக பேசப்படுகிறது. நடிகர் தனது ஒப்பந்தத்தில் இடம்பெறும் முழு சம்பளமும் முறையான கணக்கில், சட்டப்பூர்வமாகவே வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அதில் எந்தவித சமரசத்திற்கும் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் வாதம்: மறுபுறம், திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டுக்கும் கணக்கு காட்ட வேண்டும் என்ற காரணத்தால், தயாரிப்பு தரப்பும் பல்வேறு கணக்குகளை முன்வைப்பதாகவும், அதில்தான் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டை மாற்றாமல் இருப்பதால், புதிய பட அறிவிப்பு தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதான் பேச்சு: இதற்கிடையில், அந்த நடிகரின் கால்ஷீட்டை பெற முடியாமல் பல இயக்குநர்களும் காத்திருப்பதாகவும், ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன் அடுத்தடுத்த படங்கள் வேகமாக அறிவிக்கப்படும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பவர் நடிகர்?: எனினும், இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை. சம்பள பேச்சுவார்த்தை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் எந்தவித விளக்கமும் அளிக்காத நிலையில், இது கோலிவுட்டில் பரவி வரும் கிசுகிசுக்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பந்தய நடிகருக்கு போட்டி நடிகரான பவர் நடிகர் தனது சம்பளத்தை எப்படி வாங்குகிறார்? முழுக்க முழுக்க வெள்ளைப் பணமாகத்தான் வாங்கினாரா? இல்லை தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் ஏதாவது அனுசரித்து நடந்து கொண்டாரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.