📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 28, 2026 01:33 AM

பயன்பாட்டுக்குத் தயாராகிறது தெற்கு எம்.எல்.ஏ. அலுவலகம்: தினமலர் செய்தி எதிரொலி

பயன்பாட்டுக்குத் தயாராகிறது தெற்கு எம்.எல்.ஏ. அலுவலகம்: தினமலர் செய்தி எதிரொலி

திருப்பூர்:திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. அலுவலகம் பயன்பாட்டுக்கு வரும் வகையில் தயாராகி வருகிறது.

திருப்பூர் பார்க் ரோட்டில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் கடந்த சில மாதங்கள் முன்பு திறப்பு விழா கண்டது. அரசு நிலத்தில், 1.07 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டடம் கட்டப்பட்டது. அப்போதைய எம்.எல்.ஏ. செல்வராஜ் முன்னிலையில், கலெக்டர் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவுக்குப் பின் அங்கு எந்த அலுவலகப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இப்புதிய கட்டடத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. புதிய எம்.எல்.ஏ. பதவியேற்ற பின்னும் இந்த அலுவலகம் திறக்கப்படாமல் வீணாகும் நிலை காணப்பட்டது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து, எம்.எல்.ஏ. பாலமுருகன் அலுவலகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். கட்டடம் முழுமையாக பெயின்ட் செய்யப்பட்டது. வரும் 27-ம் தேதி இதன் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தில் ஐந்து பேர் பணியாற்றுவர். பொதுமக்கள் எம்.எல்.ஏ.-வை இங்கு நேரில் சந்திக்கலாம்; தங்கள் பகுதி பொதுப் பிரச்னைகள், அடிப்படை வசதிகள், வேண்டுகோள்கள் குறித்து தெரிவித்து உரிய தீர்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், பார்க் ரோட்டில் உள்ள தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம்.