📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 05, 2026 01:01 AM

பழநி நில மோசடி விவகாரத்தில் மேலும் 2 பேர் சஸ்பெண்ட்

பழநி நில மோசடி விவகாரத்தில் மேலும் 2 பேர் சஸ்பெண்ட்

பாலச்சந்தர்

பழநி: பழநி நிலப்​ப​திவு முறை​கேடு விவ​காரத்​தில் மேலும் இரு​வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பழநி நில முறை​கேடு விவ​காரத்​தில், சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், மாவட்ட பதி​வாளர் சசிகலா ஆகியோர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக 4 பேரை சிபிசிஐடி போலீ​ஸார் கைது செய்​தனர். பதிவுத் துறை நடத்​திய விசாரணை​யில், ரூ.100 கோடி நிலத்தை முறை​கே​டாக பதிவு செய்​வதற்கு தேவை​யான அனைத்து பணி​களை​யும் மேற்​கொண்​டது பழநி உதவி சார் பதி​வாளர் பாலச்​சந்​தர் மற்​றும் அவருக்கு உதவி​யாக இளநிலை உதவி​யாளர் சிவசங்​கரி என்பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவர்​கள் இரு​வரை​யும் பணி​யிடை நீக்​கம் செய்​து, நேற்று பதிவுத் துறை தலை​வர் அருண்​சுந்​தர் தயாளன் உத்​தர​விட்​டார்.

இதனிடையே, இந்த முறை​கேட்​டில் சிக்​கிய சார் பதி​வாளர் ஜஸ்​டின் மணி​கண்​டன், தனது பணிக்​காலத்​தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்​களை​யும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.