📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 03, 2026 09:00 AM

பழனிசாமி நேரம் ஒதுக்காததால் விஜயால் சந்திக்க முடியவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

பழனிசாமி நேரம் ஒதுக்காததால் விஜயால் சந்திக்க முடியவில்லை: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

சென்னை: ''அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை சந்திக்க, முதல்வர் விஜய் வி ரும்பினார்; அவர் தான் நேரம் ஒதுக்கவில்லை,'' என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார் .

அவர் அளித்த பேட்டி: திருச்சியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் பேசியது, யாருக்கு புரிய வேண்டுமோ, அவர்களுக்கு புரிந்து விட்டது.

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்; தோல்வியை தழுவியவர்கள், அதை கு றை யாக சொல்கின்றனர்.

கடந்த ஒன்பது ஆண்டு களாக, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். திடீரென்று பழனிசாமியை முதல்வர் ஆக்குவேன் எனக்கூறி, கூட்டணி அமைத்தார்.

அவருடன் பயணித்த, 50 ஆயிரம் பேரை, நடுரோட்டில் தவிக்க விட்டு, தன்னை காப்பாற்றிக் கொள்ள கூட்டணி அமைத்தார்.

அவர் இனிமேல், அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவது நல்லது. விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி வழங்குவது தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் துாண்டுதலில் சிலர் போராடி வருகின்றனர்.

ஒவ் வொரு துறையிலும் எவ்வளவு நிதி கையிருப்பு உள்ளது; நிலுவையில் உள்ள, 'டெண்டர்'கள்; என்னென்ன பிரச்னைகள் என்பதை, அமைச்சர்கள் முழுவீச்சில் ஆராய்ந் து வருகின்றனர்.

முதல்வர் விஜய், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். அதன்படி ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.

பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது; அரசியல் சூழ்நிலை கருதி, பழனிசாமி தரப்பில் நேரம் ஒதுக்கவில்லை. இதனால், சந்திப்பு நடக்கவில்லை. இதில், வேறு ஏதும் காரணம் இல்லை.

திருச்சி கூட்டத்தில், யாரையும் அவமரியாதையாக முதல்வர் பேசவில்லை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அவரிடம் இல்லை. குழந்தைகளிடம் கூட, அவர் பக்குவமாக நடந்துகொள்வார்.

தி.மு.க., ஆட்சியில் குற்றச் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் நடந்து, ஒரு வாரத்திற்கு பின் கூட வழக்குப் பதிவு செய்யவில்லை. தற்போது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

தனி ப்பட்ட காரணங்களுக்காக நடக்கும் கொலைகளுக்கு பின், காவல்துறை எப்படி நடந்து கொள்கிறது என்று, பார்க்க வேண்டும்.

கைது நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியை விட, காவல் நிலைய செயல்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதாக பொதுமக்கள் சொல்கின்றனர்.

போதை பொருட்கள், குட்கா, சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நிர்மல் குமார் கூறினார்.