Politics
June 06, 2026 11:00 PM
‘ராஜேந்திர சோழன் போல் கடல் கடந்து தமிழின் பெருமைகளை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி’
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இந்திய அரசியல் வரலாற்றிலேயே தமிழ்மொழி, தமிழ் மக்கள் தமிழரின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின்மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி.அவரின் சாதனைக்குரிய 12 ஆண்டுகால மத்திய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளார்.
முதன்முதலாக பாதுகாப்புத்துறையிலும், நிதித்துறையிலும் முதல் தமிழ் பெண் மத்திய மந்திரியாக நிர்மலா சீதாராமனை நியமித்த பெருமைக்குரியவர் நமது பாரதப் பிரதமர்.
முதலாம் ராஜேந்திர சோழ மன்னனைப்போல், சர்வதேச கடல் எல்லைகள் கடந்து தமிழின் பெருமைகளை கொண்டு சென்ற நமது பெருமைக்குரிய பிரதமரை முதலாம் நரேந்திர சோழன் என்று சொன்னால் அது மிகையாகது. சர்வ நிச்சயமாக மோடிக்காக தமிழகம்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Politics