ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் ஏற்காவிட்டால், தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம்
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சராஇயில் இருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
2029 மக்களவை தேர்தல்
'வரும் 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலில், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 40 தொகுதிகளில், த.வெ.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.
'தெலுங்கானாவில் கவிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, உபி.,யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணிகளுக்கு, 50 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி மொத்தம், 130 எம்.பி.,க்கள் அணியை உருவாக்கி, அதற்கு விஜய் தலைமை வகிப்பார். காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் பிரதமராவார் என முதல்-அமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணித்துள்ளார்.
விஜய் பிரதமர்
அவரது கணிப்பு தகவல்களை, த.வெ.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகிற, 'வெற்றி டிவி' நிர்வாக இயக்குநர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு விஜயின் பயணம் விரிவடையுமா என்ற விவாதத்தை, ஜோதிடரின் கணிப்பு உருவாக்கி, காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இன்றைய முதல்-அமைச்சர் விஜய், நாளைய பிரதமர்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், துாத்துக்குடி மாவட்ட த.வெ.க.,வினரால் ஒட்டப்பட்டு உள்ளன. அதற்கு பதிலடியாக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் தங்களது எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம்
இந்தநிலையில், குமரியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,
"2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி தான். ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம் என்றார்.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.