ரேவதியை நாடுகடத்தும் பிளான்.. இந்தியாவுக்கே வர முடியாதபடி பாஸ்போர்ட்டை எரிப்பேன்.. கார்த்திகை தீபம்
சென்னை: கார்த்திக் தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், ரேவதி, கார்த்திக் இணைந்து தம்பதியர் பூஜை செய்ததை பார்த்த சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். அப்போது சந்திரகலா, ரேவதிக்கு கார்த்திக்குடன் திருமணம் நடந்த எல்லாம் உண்மை தெரிந்துவிட்டது. டாக்டரின் பொண்ணு வீட்டுக்கு வந்த போதே ரேவதிக்கு சந்தேகம் வந்து எல்லாத்தையும் கார்த்திக்கிட்ட கேட்டு தெரிந்து கொண்டாள். ஆனால், உன்கிட்ட கார்த்திக் மீது கோவமா இருக்குற மாதிரி நாடகம் ஆடி இருக்கா, இது எல்லாமே அந்த கார்த்தி செய்ற வேலை தான் அக்கா.
கார்த்திகை தீபம்: நீ அவளிடம் எதையும் தெரிந்தது போல காட்டிக்கொள்ளாமல், அவர்களை பிரிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிறாள். ஆத்திரத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி, ரேவதியை நாலு வார்த்தை கேட்டத்தால் என் மனசு ஆறும் என்கிறாள். உடனே சந்திரகலா, அக்கா கொஞ்சம் அமைதியா இரு, இப்போது ரேவதியிடம் நீ கேள்வி கேட்டால், நாம்தான் சிக்கிக் கொள்வோம். அவ திரும்பி உன்னை கேள்வி கேட்ப, முதலில் கார்த்திக்-ரேவதியை பிரிக்க வேண்டும். ரேவதியை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுடலாம் என்றார் சந்திரகலா.
பிரிக்கும் திட்டம்: அப்போது, சாமுண்டீஸ்வரி நீ சொல்வதும் சரி என்று, கனடாவில் இருக்கும் தனது தோழி சினேகாவுக்கு ஃபோன் செய்து, என் மகள் ரேவதி ஒரு பொருக்கியை காதலித்து எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டால், அவன்கிட்ட இருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். நான் ரேவதியை கனடாவுக்கு அனுப்பி வைக்கிறேன், ஆறு மாதம் அவளை உன்னிடம் வெச்சிக்கோ என்று கேட்கிறார். அதற்கு சினேகா, அவளை இந்தியாவுக்கு திரும்ப முடியாதபடி அவளுடைய பாஸ்போர்ட்டையே எறித்துவிடுகிறேன். நீ அனுப்பி வைத்தால் போதும் நான் பார்த்து கொள்கிறேன் என்கிறாள்.
சந்தேகப்படும் கார்த்திக்: இதற்கிடையில், கோவிலில் பூஜையை முடித்து வீட்டிற்கு வரும் ரேவதியிடம், சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் எதுவும் தெரியாதது போல நடிக்கிறார்கள். பின், சாமுண்டீஸ்வரி என் தோழியின் மகளுக்கு கனடாவில் திருமணம். என்னால் போக முடியாது. எனக்கு பதிலாக நீ போய்விட்டு வா என்று ரேவதியிடம் சொல்கிறாள். இதை நம்பிய ரேவதியும் எந்த சந்தேகமும் இல்லாமல் ஒகே நான் போய்ட்டு வருகிறேன் என்கிறாள். உடனே கார்த்திக்கிற்கு போன் செய்து இந்த விஷயத்தை சொல்கிறாள் ரேவதி. ஆனால், கார்த்திக்கிற்கு இதில் ஏதோ தப்பா இருக்கு ரேவதி, ஏதோ சதி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது என்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா, நாளைக்கு எனக்கு பிளைட் என்கிறாள். அடுத்த எபிசோடில் ரேவதி உண்மையிலேயே கனடா செல்கிறாரா? கார்த்திக் இந்த சதியை முறியடித்து ரேவதியை தடுக்கிறாரா? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் நாளை என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.