📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 16, 2026 08:34 PM

ரெயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகம்

ரெயில் டிக்கெட் முன்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிமுகம்

டிக்கெட் முன்பதிவு

மேம்படுத்தப்பட்ட இணையதளம்

இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் பீட்டா பதிப்பை ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது அறிமுகம் செய்துள்ளது.

பீட்டா பதிப்பு

முன்பதிவு செய்யும்போது தேவையற்ற கேப்ட்சாக்களை நீக்குதல், தேவையற்ற பாப்-அப்களை அகற்றுதல், ஒளிரும் கிராபிக்ஸ், கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.

பயணிகள் அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் உள்ளதா என்பதைப் பார்க்கலாம்.

இந்த இணையதளம் வேகமான செக்-அவுட் செயல்முறையை வழங்குகிறது. இதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவைப்படும் படிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்த இணையதளம் பயணிகளின் விவரங்களைச் சேமிக்கும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் முன்பதிவு செய்வது எளிதாகிறது.

கருத்துகள் வரவேற்பு

இந்த பீட்டா பதிப்பை https://www.irctc.co.in/eticket/ என்ற முகவரியில் அணுகலாம். தற்போதுள்ள இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் பீட்டா பதிப்பிற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் எளிமைப்படுத்தப்பட்ட அம்சங்கள் குறித்துக் கருத்துக்களை வழங்குமாறு ரெயில்வே அமைச்சகம் பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளது.