📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 24, 2026 05:35 AM

ரீல்ஸ் மோகம்.. கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

ரீல்ஸ் மோகம்.. கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (வயது 28). தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சில நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.

பின்னர் அவர்கள் தமிழக-கேரளம் மாநில எல்லையில், தேனி மாவட்டம் குரங்கணி மலை உச்சியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக மூணாறு அருகே சூரியநல்லியில் இருந்து நேற்று அதிகாலை ஒரு ஜீப்பில் கொழுக்குமலைக்கு புறப்பட்டனர். அங்கு அவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.

பள்ளத்தில் விழுந்தார்

காலை 8 மணியளவில் அங்குள்ள சிங்கப்பாறை என்ற இடத்தில் அவர்கள் புகைப்படம், வீடி யோக்கள் எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது கார்த்திக் ஆபத்தான பள்ளம் அருகில் நின்று கொண்டு இருந்தார். எதிர்பாராத விதமாக அவர் பள்ளத்தில் தவறி விழுந்தார். அது சுமார் 200 அடி பள்ளம் ஆகும்.

உடனே அவருடைய நண்பர்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கேரளம் மாநில தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குரங்கணி மற்றும் போடியில் இருந்து போலீசாரும் அங்கு விரைந்தனர்.

2 மணி நேரம் போராடி மீட்பு

பள்ளத்தில் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சுமார் 2 மணி நேரம் போராடி கார்த்திக்கை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரை ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் இதே சிங்கப்பாறை பகுதியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதல் தோல்வியால் பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்தார். இந்த சிங்கப்பாறை பகுதி யில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'ரீல்ஸ்' மோகத்தால் தடையை மீறி அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அங்கே ஆட்கள் நுழையாத வகையில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.