📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 01, 2026 03:30 PM

ரஜினி பரிசளித்த ஆன்மிக புத்தகம்: ரா‌ஷி கன்னா

ரஜினி பரிசளித்த ஆன்மிக புத்தகம்: ரா‌ஷி கன்னா

‘தர்மன்’ படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த், ராஷி கன்னாவிற்கு ஆன்மிகம் தொடர்பான ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்கியுள்ளார்.

ரா‌ஷி கன்னாவும் அப்படத்தில் நடிக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துவருகிறார். மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக கூறப்படும் இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின்போது ரஜினியுடன் ஆன்மிகம் குறித்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாக ராஷி கன்னா தெரிவித்துள்ளார். அந்த உரையாடலின் முடிவில், ஆன்மிகம் தொடர்பான ஒரு புத்தகத்தை ரஜினி தனக்குப் பரிசாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரஜினியின் எளிமையான, அன்பான அணுகுமுறை தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறிய ராஷி கன்னா, அவர் பரிசளித்த ஆன்மிகப் புத்தகம் தனது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் நேர்மறையான சிந்தனையையும் உருவாக்கியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ரா‌ஷி கன்னாவின் இந்தப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரா‌ஷி கன்னா, தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.