ரஜினிகாந்த் உடன் கயாடு லோஹர்.. விஜய்யோட 100 நாள் ஆட்சி எப்படி இருக்கு?.. சூப்பர் ஸ்டார் ரியாக்ஷன்!
சென்னை: ஜெயிலர் 2 படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக சென்னை விமான நிலையத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ரஜினிகாந்த் உடன் நடிகை ஸ்ரேயா செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோக்களை சமீபத்தில் வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், தற்போது கயாடு லோஹர் விமானத்தில் ரஜினிகாந்த் உடன் டிராவல் செய்த நிலையில், அவருடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார்.
விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் ஜெயிலர் 2, தர்மன் படங்கள் குறித்தும் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்தும் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ரஜினிகாந்த் உடன் கயாடு லோஹர்: "நான் இன்னும் கனவுலகில் தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகையாக இருந்து, திடீரென ஒரு விமானப் பயணத்தில் அவருக்கு அருகில் அமரும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. என்னால் இன்னும் இதை நம்ப முடியவில்லை" என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தைக் கண்ட அந்த நொடியில், மனதில் 'தளபதி' படத்தின் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடல் ஒலிக்கத் தொடங்கியதாகவும், உடனடியாகத் தான் முற்றிலும் வேறொரு உலகிற்குச் சென்றுவிட்டதாகவும் கயாடு லோஹர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் 2 ஓவர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், ஜெயிலர் 2 ஷூட்டிங் சூப்பராக முடிந்து விட்டது என்றார். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜெயிலர் 2 படத்தில் அல்ல போலேலோ பாடல் பட்டித் தொட்டி எங்கும் டிரெண்டாகி வருகிறது.
தர்மன் ரெண்டு ஷெட்யூல் ஓவர்: தர்மன் படத்தின் 2வது ஷெட்யூல் சமீபத்தில் தொடங்கியதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்த நிலையில், அந்த ஷெட்யூலை முடித்து விட்டுத்தான் சென்னை திரும்பியுள்ளார் ரஜினிகாந்த். தர்மன் படத்தின் ஷூட்டிங் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் ரொம்ப சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது என பதிலளித்தார்.
விஜய்யின் 100 நாள் ஆட்சி: முதலமைச்சர் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்த கேள்வி வந்து விழுந்ததும் எதுவும் பதில் அளிக்காமல், வழக்கம் போல தேங்யூ என சொல்லிவிட்டு ரஜினிகாந்த் கிளம்பி விட்டார். அவரது அந்த ரியாக்ஷன் வீடியோவை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.