உண்மையான கேரக்டரே இதுதான் முதல்வர் விஜய் அரசியலில் வில்லன்: டிடிவி தினகரன் கடும் தாக்கு
உண்மையான கேரக்டரே இதுதான் முதல்வர் விஜய் அரசியலில் வில்லன்: டிடிவி தினகரன் கடும் தாக்கு
தஞ்சாவூர்: முதல்வர் விஜய் சினிமாவில் ஹீரோ, அரசியலில் வில்லன், அவரது உண்மையான கேரக்டரே இதுதான் என டிடிவி தினகரன் கடுமையாக தாக்கியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் விஜய் கையில் 3 பைல் உள்ளது. ஆக்சன் எடுக்க வைத்து விடாதீர்கள் என மிரட்டுகிறார். ஒரு துறையில் ஊழல் நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளருக்குதான் பொறுப்பே தவிர, சட்டசபையில் இதுவரைக்கும் எந்த முதல்வரும் இப்படி மிரட்டுவதற்காக பயன்படுத்தியது கிடையாது. விஜய் சினிமாவில் ஹீரோவாக பார்க்கப்பட்டார். அரசியலில் வில்லனாக இருக்கிறார். டிவியில் அவரை பார்க்கும் போது ரகுவரன் ஸ்டைலில் வில்லனாக தெரிகிறார். அவருடைய உண்மையான கேரக்டர் அதுதான்.
ஹீரோவாக நடிக்கும் போது விருதுகளை பெறவில்லை. ஆனால், இப்போது அரசியல்வாதியாக சிறந்த வில்லன் நடிகராக பாரதரத்னா விருது கொடுக்கும் அளவுக்கு விஜய் நடந்து கொள்கிறார். சட்டசபையில் அமைச்சர்கள் எல்லாம், தலை, கால் புரியாமல் பேசுகிறார்கள். ஆதவ் அர்ஜூனா, திமுகவில் எம்பி சீட் கொடுக்கவில்லை என விசிகவுக்கு சென்றார். தற்போது, விஜய்யின் தீவிர ஆதரவாளராக காட்டி வருகிறார். அமைச்சர் நிர்மல்குமார், பல கட்சி பல்ராமன். லாட்டரி விழுந்த மாதிரி அமைச்சராகி விட்டு அந்த ஆச்சரியகுறிகளின் நடவடிக்கையை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
திராவிட ஆட்சிகள் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகளை யார் சொல்லி இருந்தாலும், இந்தியாவில் ஒரு சிறந்த மாநிலமாக எல்லா துறைகளிலும் தமிழ்நாடு இருந்தது. தமிழகம் வளர்ந்து சென்றது. ஆனால், இன்றைக்கு எல்லா துறைகளிலும் பின்னடைவை நோக்கி செல்லுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விஜய் தமிழ் படத்தில் தான் ஹீரோவாக நடித்தார். இங்கே தான் அந்த இன்ஸ்டா ஓடும். நார்த்தில் அந்த இன்ஸ்டா ஓடாது. முதலில் விஜய் சொன்னதை செய்யட்டும், தமிழக மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.
பாஜ ஆட்சிக்கு வந்துடும் என ஆச்சரியகுறிகளுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் சண்முகம், வீரபாண்டியன் எல்லாம் தவெக யார் என்று மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். மாணிக்கம் தாகூரும் தவெகவுக்கு எதிராக பேசி வருகிறார். திருமாவளவனும் உணரும் காலம் வரும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஹிட்லர் பாணியில் இந்த ஆட்சி போய் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவினரை அழைத்துப்போய் நடுரோட்டில் நிறுத்திய செங்ஸ்
செங்கோட்டையன் என்பவரை அடையாளம் காட்டிய கட்சியை, யாரோ ஒரு சில பேர் மேல் உள்ள கோபத்தில் அந்த கட்சி அழிந்து விடும் என நினைக்கும் அளவுக்கு ஒரு வன்மம் பிடித்த மனிதராக இருக்கிறார். அமமுக, அதிமுகவை சேர்ந்தவர்களை எல்லாம் போன் போட்டு அழைத்து தவெகவில் கொண்டு போய் நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். அதிமுக அழிந்து விடும் என செங்கோட்டையன் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்தான் வீழ்ந்து போவார் என்று செங்கோட்டையன் கூறினார்.