📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 17, 2026 02:03 AM

ரூ.500 கோடி போதைப்பொருள்

ரூ.500 கோடி போதைப்பொருள்

நாட்டையே அதிரவைக்கும்படியாக தமிழகத்தில் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதை வைத்திருந்ததாக த.வெ.க. நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன், சுகன் ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு, சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இவர் கைதுசெய்யப்பட்ட தகவல் வெளியானதும், ஆளும் கட்சிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து, பூபாலனைக் கட்சியைவிட்டு நீக்குவதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.