School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா?
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?

Tamil Nadu School Reopen Date 2026: 2026- 27ஆம் கல்வியாண்டில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெற்றோர்கள், பள்ளிகளின் கோரிக்கைகளை ஏற்று, பள்ளிகள் திறப்பு மாற்றி தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழ்நாட்டில் 2026- 27ஆம் கல்வியாண்டில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

வானிலை ஆய்வு மையத்திடம் கோரிக்கை

அந்த தகவல்கள் வந்த உடன், முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் காண்பித்து ஆலோசிக்கப்படும், அதன் பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி இருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தலைவர்கள் கோரிக்கை

ஏற்கெனவே பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தனர். முந்தைய கல்வி ஆண்டுகளிலும் இதேபோன்று பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது நினைவுகூரத் தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards. She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.