Singappen Special Force: CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான்
Singappen Special Force: CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
CM Vijays Singappen Special Task Force: பெண்கள் பாதுகாப்பிற்கான முதலமைச்சர் விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையின் தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
CM Vijays Singappen Special Task Force: பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையின் தொடக்க விழா ரத்தானதற்கான காரணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா மீண்டும் ரத்து
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும், தனது தேர்தல் வாக்குறுதியின்படி, பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன் தொடக்க விழா கடந்த 27ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் டெல்லி சென்றதால், அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இந்த அதிரடிப்படையின் தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. வரவேற்பு பேனர்கள் வைப்பது, வாகனங்கள் அணிவகுப்பு, பெண் காவல்படையின் அணிவகுப்பு ஒத்திவைப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டு இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் இந்த தொடக்க விழாவானது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா மீண்டும் ரத்தானதற்கான காரணம் என்ன?
தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக கருதி, பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு அதிரடிப்படைக்கான கோப்பில் விஜய் முதல்நாளே கையொப்பிட்டார். ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து தாமதமாவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, நிர்வாக காரணங்கள் காரணமாகவே இன்றைய தொடக்க விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக அரசு அமைந்தால் பெண்கள் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தேர்தல் பரப்புரையில் விஜய் பேசியிருந்தார். அந்த வகையில் உருவாக்கப்படும் சிங்கப்பெண் திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், சிறப்பானதகாவும் இருக்க வேண்டும் என அரசு விரும்புகிறதாம். அதனை முழுமையாகவும் திறமையானதாகவும் மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம். வெகுவிரைவிலேயே முழு வீச்சில் இந்த அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வரும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு அதிரப்படையின் பணி என்ன?
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்ற சம்பவங்கள் நடக்காமல், சிங்கப்பெண்கள் சிறப்பு படையினர் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.
இப்படையினர், பேருந்து நில யங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உட்பட, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கும் வகையில் தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுப்பதை இலக்காக கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: TN Weather Update: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கைtn pol
முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில்..
முதலமைச்சர் விஜயின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் இத்திட்டத்தில், முதற்கட்டமாக இப்படையின் முதல் பெண் ஐ.ஜி., ஆக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். மேலும் டிஜிபி அலுவலகத்தில், ஒரு ஜஜி, போலீஸ் எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள், 4 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுமட்டுமல்லாமல், இப்படையில் இருக்கும் காவலர்களுக்கு என தனி சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிரடிப்படைக்கான சீருடை
அதிரடிப்படையினருக்கான சீருடையானது கருப்பு நிற தொப்பி, பெல்ட், கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் என வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு நிறத்தினாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.