📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 21, 2026 04:34 PM

Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த

Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் புகுந்த பாடகர் அறிவு.! அதிரடியாக கைது செய்த

Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?

singer Arivu arrest : தலைமைசெயலகம் முன்பாக நீட் தேர்வை ரத்து செய்யகோரி ராப் பாடகர் அறிவு கோஷமிட்ட நிலையில் கைது செய்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய்யை சந்திக்க அழைத்து வரப்பட்டார்.

டெல்லியில் கரப்பான் பூச்சி போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பேரணி நடத்தும்போது காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடுத்தனர் இதில் பல மாணவர்கள் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளானார்கள். மேலும் பாராளுமன்றத்திற்குள் நுழையவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சசென்னையில் தலைமைச்செயலகத்திற்கு பிரபல பாடகர் அறிவு இன்று காலை செல்ல முற்பட்டார்.

கைது செய்யப்பட்ட அறிவு

அப்போது திடீரென நீட் தேர்விற்கு எதிராக முழக்கமிட்டவர் முதலமைச்சர் விஜய் நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என முழக்கமிட தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாடகர் அறிவை சுற்றிவளைத்த போலீசார் தரதரவென கைது செய்து இழுத்து சென்றனர். இந்த நிலையில், இந்த தகவலை கேள்விப்பட்ட முதலமைச்சர் விஜய் பாடகர் அறிவை தனது அறைக்கு அழைத்து வரும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அறிவு முதலமைச்சர் விஜய்யை சந்திக்க அழைத்து செல்லப்பட்டார்.

அறிவு என அழைக்கப்படும் அறிவரசு கலைநேசன் பிரபல தமிழ் பாடகராவார். "என்ஜாய் எஞ்சாமி" மற்றும் "நீயே ஒலி" போன்ற சுயாதீன தனிப்பாடல்கள் மூலம் பிரபலம் பெற்றவராவார். முதலமைச்சர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல், சார்பட்டா பரம்பரை நியே ஒலி, நட்பே துணை படத்தில் சிங்கில் பசங்க என பல பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி