Spiderman Brand New Day Review: ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே விமர்சனம்.. பாசப் போராட்டம்!
சென்னை: மார்வெலின் 38வது படமாகவும் எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரிஸின் 4வது படமாகவும் உருவாகியுள்ள ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாகத்திலும் பீட்டர் பார்க்கர்/ ஸ்பைடர்மேனாக டாம் ஹாலண்ட் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை மொத்த படத்தையும் தனது தோள் மீது சுமந்து அசத்தியுள்ளார்.
மார்வெல் ரசிகர்களை மீண்டும் பயங்கரமாக கவர்வதற்காக ஸ்பைடர்மேன் உடன் அந்த சூப்பர் அவெஞ்சர் கதாபாத்திரமும் இணைந்து வரும் இடைவேளை காட்சியே போதும் கொடுத்த காசுக்கு வொர்த் தான்.
அதிகளவில் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் இந்த படத்தில் ஒரு பாசப் போராட்டத்தையே இயக்குநர் ரசிகர்களுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அது எந்தளவுக்கு படத்தை காப்பாற்றியது என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
பிராண்ட் நியூ டே கதை: மாஸ்க் போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் ஸ்பைடர்மேன் (டாம் ஹாலண்ட்) தனது காதலியான எம்ஜே (ஜெண்டாயா) மற்றும் நண்பன் நெட் (ஜேக்கப் பேட்டலன்) உள்ளிட்டவர்களுக்கு தன்னோட எதிரிகளால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தான் யார் என்றே தெரியாத அளவுக்கு மறக்கச் செய்து தனிமையில் வாழ்ந்து வருகிறான்.
அதீத சக்திக் கொண்ட தனது தங்கையை டேமேஜ் கன்ட்ரோல் எனப்படும் அரசின் பாதுகாப்பு டீம் ஆராய்ச்சி என்கிற பெயரில் துன்புறுத்திக் கொன்றுவிட அதற்கு பழிவாங்கத் துடிக்கும் வில்லியை ஸ்பைடர்மேன் எப்படி தடுத்தார் என்பதே இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: சூப்பர் பவர் இருப்பவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது என்றும் சாதாரண மனிதர்கள் அவர்களை வாழவே விடமாட்டார்கள் என்கிற கதையை வைத்து ஹீரோவையும் வில்லனையும் உருவாக்கி ரசிகர்களுக்கு செம தீனிப் போட்டுள்ளார் இயக்குநர்.
டெலிபதி மூலம் மற்றவர்களை கன்ட்ரோல் செய்து தன்னுடைய பழிவாங்கல் படலத்தை தொடங்கும் நபர் யார் என்பதே தெரியாமல் தன்னுடைய நிஜ வில்லன் யார் என்றே தெரியாமல் மக்களை ஆயுதமாக்கி வில்லன் செய்யும் வேலைகளால் மக்களையும் தாக்க முடியாமல் தவிக்கும் இடங்களிலும் டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேனாக நச்சென நடித்துள்ளார்.
இன்னொரு பக்கம் தனது காதலிக்கே தன்னை அடையாளம் தெரியாமல் போய்விட அவர் இன்னொரு நபருடன் லிப் கிஸ் அடிப்பதை பார்த்து அப்செட்டாகி கிளம்பி வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு செம ஃபீல் கொடுக்கும் லவ் டிராமா பார்த்தை போன்ற உணர்வுகளை இந்த படம் கடத்துகிறது.
சாதாரண மக்களை தாண்டி ஹல்க்கையே தனது கட்டுப்பாட்டுக்குள் வில்லி கொண்டு வர அவருக்கும் ஸ்பைடர்மேனுக்கும் இடையே நடக்கும் அந்த சண்டை தான் மார்வெல் ரசிகர்களுக்கான மகத்தான தீனி.
பிளஸ்: ஸ்பைடர்மேன் தனது காதலியை காப்பாற்ற போராடும் இடங்களும், காதலியை கன்ட்ரோலில் எடுத்து வில்லி விளையாடும் இடங்கள் எல்லாம் வேறலெவல் ஸ்க்ரீன்ப்ளே. ஸ்பைடர்மேன் - ஹல்க் சண்டை போர்ஷன் தான் மொத்த படத்திலும் ஆக்ஷன் பிரியர்களுக்கான வொர்த்தான விருந்து. ஜீன் கிரேவாக நடித்துள்ள நடிகை சாடி சின்க் அதிகமாக அலட்டிக் கொள்ளாத வில்லனாக வந்து ரசிகர்களை கவர்கிறார். ஃப்ளோரன்ஸ் பக் நீச்சல் குள ஆபீஸ் சீனெல்லாம் அல்டிமேட். மைக்கேல் ஜியாச்சினோவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலத்தைக் கொடுத்துள்ளது. பிரெட் பாவ்லாக் ஸ்பைடர்மேன் உடனே நாமும் பறப்பது போன்ற ஒளிப்பதிவை செய்து தனித்து நிற்கிறார்.
மைனஸ்: படத்தில் பிரச்னையே வில்லன் போர்ஷனில் தான். அந்த சைடும் பாசப்போராட்டத்தை காட்டிய நிலையில், கிளைமேக்ஸ் எல்லாம் இடைவேளை அளவுக்கு சூடு பிடிக்கவில்லை. டேமேஜ் கன்ட்ரோல் அதிகாரியாக நடித்துள்ள டிராமல் டில்மேன் மெயின் வில்லனாக மாற வேண்டிய இடத்தில் புஷ் ஆகிப்போனது தான் 2ம் பாதி படம் பெரிதாக கைகொடுக்காமல் போய்விட்டது. பொதுவாக ஹாலிவுட் படங்கள் எல்லாம் வில்லன் எடுக்க நினைக்கும் விஷயத்தை சாதித்துக் காட்டிய பின்னர் ஒரு பெரிய சவாலை ஹீரோவுக்குக் கொடுத்து அதனை முடிப்பார்கள். ஆனால், இந்த படத்தில் அது மிஸ் ஆனது வருத்தம் தான். சில பல குறைகள் இருந்தாலும், ஆக்ஷன் ரசிகர்களுக்கும் லவ் டிராமா விரும்பிகளுக்கும் இந்த ஸ்பைடர்மேன் கொடுத்த காசுக்கு வொர்த் வர்மா தான்.