சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவுங்க.. இலங்கை மாஜி தமிழ் எம்பி சிவாஜிலிங்கம் கலங்கியபடி வீடியோ
சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவுங்க.. இலங்கை மாஜி தமிழ் எம்பி சிவாஜிலிங்கம் கலங்கியபடி வீடியோ

கொழும்பு: சிங்களர்களுக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அந்த நாட்டின் முன்னாள் தமிழ் எம்பி சிவாஜிலிங்கம் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.70 லட்சம் தேவைப்படும் நிலையில் உதவிகேட்டு கலங்கியபடி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது உயிரை காப்பாற்றும்படி அவர் தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கையில் தமிழ் ஈழம் விடுதலை இயக்கம் (TELO) உறுப்பினராக இருப்பவர் சிவாஜி லிங்கம். இவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தூரத்து உறவினர் ஆவார். இலங்கையில் தமிழர் விடுதலைக்காக குரல் கொடுத்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் சிவாஜி லிங்கம்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 2001, 2004 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று எம்பியாக இருப்பவர் சிவாஜி லிங்கம். இலங்கை தமிழரான இவர் இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். மேலும் இலங்கை இனப்படுகொலைக்கு பிறகு 2010ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி தோல்வியடைந்தார்.

மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராக...

போர்குற்றம் குறித்து வெளிப்படையான சுதந்திரமான விசாரணை வேண்டும்என்று தொடர்ந்து வலியுறுத்தினார். முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தவர். இவரை பலமுறை இலங்கை ராணுவம் கொல்ல முயன்றது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிவாஜி லிங்கம் வீடியோ

இந்நிலையில் தான் சிவாஜி லிங்கம் தற்போது உதவி கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கலங்கியபடி சிவாஜி லிங்கம் கூறியுள்ளதாவது: ''தமிழ் உறவுகளே.. நான் இப்போது உங்களுடன் நடத்தும் இந்த சந்திப்பு நீண்டகால சந்திப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. எனக்கு சிறுநீரகங்கள் இரண்டும் பழுதடைந்துள்ளது. மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அறுவை சிகிச்சை தொடர்பான நடைமுறைக்கு இதுவரை சுமார் ரூ.19 லட்சம் வரை செலவாகி உள்ளது. பல்வேறு விதமான பரிசோதனைகள், சிறுநீரகத்தை கொடுப்போருக்கும், அதனை வாங்கும் எனக்கும் பொருத்தம் இருக்க வேண்டும் என்று பல மாதங்களாக பல்வேறு விதமான சோதனைகளுககாக ரூ.19 லட்சம் செலவிட்டுள்ளேன். இன்னும் அறுவை சிகிச்சைக்காக சுமார் ரூ.70 லட்சம் தேவைப்படுகிறது.

உதவி செய்ய வேண்டும்