📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 11, 2026 04:02 PM

ஸ்டீபன் ஃபிளமிங்கிற்கு அடுத்து CSK Coach யார்? ஹேமங் பதானியா.. பிரண்டன் மெக்கல்லமா?

ஸ்டீபன் ஃபிளமிங்கிற்கு அடுத்து CSK Coach யார்? ஹேமங் பதானியா.. பிரண்டன் மெக்கல்லமா?

ஸ்டீபன் ஃபிளமிங்கிற்கு அடுத்து CSK Coach யார்? ஹேமங் பதானியா.. பிரண்டன் மெக்கல்லமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நீண்ட காலமாக அணியை வழிநடத்திய ஸ்டீபன் ஃபிளமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளதால், சிஎஸ்கே புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

முதலில் இந்திய முன்னாள் வீரர் ஹேமங் பதானி சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளராக வரலாம் என தகவல்கள் பரவின. இதுதவிர மைக் ஹசி, பிரண்டன் மெக்கல்லம், ஆடம் வோஜஸ், மோர்னே மோர்க்கல், அபினவ் முகுந்த் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ள தகவல், இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அணியின் அடுத்த பயிற்சியாளர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஹேமங் பதானியை நியமிப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், புதிய பயிற்சியாளரை விரைவில் தேர்வு செய்ய இருப்பதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பயிற்சியாளருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், மைக் ஹசியின் பெயர் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அனுபவம் அவருக்கு உள்ளது. சமீபத்திய பயிற்சியாளர் பணிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதேபோல் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கனின் பெயரும் சிஎஸ்கே வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனினும், இவர்களில் யாரும் அடுத்த பயிற்சியாளராக உறுதி செய்யப்பட்டதாக இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

ஃபிளமிங்கின் நீண்ட கால பயணத்துக்குப் பிறகு சிஎஸ்கேவின் அணுகுமுறையில் மாற்றம் வருமா, புதிய பயிற்சியாளராக யார் பொறுப்பேற்கப் போகிறார் என்பதே தற்போது ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.