📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 05, 2026 06:30 AM

 'டாஸ்மாக்' கடையை மூடக்கோரி அமைச்சரை வழிமறித்த மக்கள்

Latest News

 'டாஸ்மாக்' கடையை மூடக்கோரி அமைச்சரை வழிமறித்த மக்கள்

Google News Tamil Latest

ஆலந்துார்: மீனம்பாக்கத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அமைச்சர் வன்னியரசுவை பொதுமக்கள் வழிமறித்தனர்.

மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி திறப்பு விழாவில், அமைச்சர் வன்னியரசு பங்கேற்றார். அருகிலிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அப்பகுதி பொதுமக்கள், அமைச்சர் வன்னியரசை வழிமறித்தனர். அப்போது, குடியிருப்பு மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர், மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.