Tamil Nadu CM Vijay News Updates: வருவாய் துறை அமைச்சராக மாறியது ஏன்? பதில் அளித்த செங்கோட்டையன்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்துள்ளது. இப்புதிய அரசில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் 23 அமைச்சர்கள் நேற்று (மே 21) முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று (மே 22) மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில்:

விசிக எம்.எல்.ஏ. வன்னியரசு மற்றும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. ஷாஜஹான் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்குத் தமிழக ஆளுநர் அர்லேகர் முறைப்படி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இன்றைய விழாவில், முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜஹான், "இறைவன் மீது ஆணையிட்டு" தனது உறுதிமொழியைக் கூறி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு முழுமையான வடிவத்தைப் பெற்று, தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வருவாய் துறை அமைச்சராக மாறியது ஏன்? பதில் அளித்த செங்கோட்டையன்

வருவாய்துறை மூலம் மக்கள் பணி செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் கேட்டேன். உள்ளத்தில் இருப்பதை கூறினேன், முதல்வர் விஜய் துறையை மாற்றினார். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம் என கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தோல்வியை சந்தித்த த.வெ.க வேட்பாளருக்கு தலைவர் பதவி

லால்குடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கு.ப.கிருஷ்ணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

பிரிட்டிஷ் கால ராணுவ தளத்தில் விஜய் ஆய்வு

முதல்வரான பின் முதல் முறையாக கோட் இல்லாமல் முதல்வர் விஜய் இன்று வலம் வந்தார். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பிரிட்டிஷ் கால ராணுவ தளத்தில் ஆய்வு செய்தார்

தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி வாகனத்தில் பயணித்தபடி விஜய் ஆய்வு

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி வாகனத்தில் பயணித்தபடி முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்

தலைமைச் செயலக புனித மேரி தேவாலயத்தில் விஜய் பிரார்த்தனை

தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பழமையான புனித மேரி தேவாலயத்தில் முதல்வர் விஜய் பிரார்த்தனை செய்தார்

திரைப்பட டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும்; விஜய்யிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

திரைப்பட டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும். திரைப்படங்களுக்கான உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது

முதல்வர் விஜய் உடன் எம்.ஆர்.எஃப் நிர்வாகிகள் சந்திப்பு

முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் மம்மன், மேலாண்மை இயக்குநர் ராகுல் மம்மன் ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் குறித்தும் பேசினர்.

முதல்வர் விஜய் உடன் மு.க அழகிரி மகள் சந்திப்பு

முதல்வர் விஜய்யை சென்னை தலைமை செயலகத்தில் மு.க அழகிரி மகள் கயல்விழி சந்தித்து பேசினார். கயல்விழி அழகிரி ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்ட நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது

விஜயிடம் வாழ்த்து பெற்ற கூட்டணி கட்சி அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எஸ். ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த ஷாஜகான் ஆகியோர் தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. எஸ். ராஜேஷ் குமார் மற்றும் திரு. பி. விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திரு.… pic.twitter.com/NeEGgADXlz

சமூக நீதி அமைச்சராக பொறுப்பேற்றார் வன்னி அரசு

சமூக நீதி அமைச்சராக தலைமைச் செயலகத்தில் விசிகவின் வன்னி அரசு பொறுப்பேற்றார். வன்னி அரசை அமைச்சர் நாற்காலியில் விசிக தலைவர் திருமாவளவன் அமரவைத்தார்.

மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - சிறுபான்மையினர் நலன் அமைச்சர் ஷாஜகான்

மக்கள் மாற்றத்தை நோக்கி வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் நிலையான ஆட்சிக்காக தவெகவுக்கு, ஐ.யு.எம்.எல் ஆதரவு. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர வாழ்த்து. சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என சிறுபான்மையினர் நலன் அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.

விஜயை சந்தித்த திருமா

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார். த.வெ.க அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில் சந்தித்து பேசினார்.

கூட்டணி அமைச்சரவை - விஜய்க்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு

சமூக நீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் முதல்வர் விஜய்க்கு நன்றியும்.. பாராட்டும்.. மக்கள் பணிகள் சிறக்கட்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வன்னி அரசு, ஷாஜஹானுக்கு வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்

அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு, ஷாஜஹானுக்கு வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் பதிவு

கடந்த 2021-26 ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்து எங்களது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று, அரசாணைகளாக மாற்றிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது இதயம் நிறைந்த நன்றி.தேர்தல் தோல்வியின் போது கூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்தபட்ச அறம் என நம்புகிறேன் என .த.வெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வன்னிஅரசுவை வாழ்த்திய பதிவில் விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் நினைவு கூர்ந்தார்.

முதலமைச்சர் விஜய் சொன்னதைச் செய்துகாட்டுபவர் - தவெக

ஆட்சியில் பங்கு என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் சொன்னதை செய்வார் செய்வதையே சொல்வார் என்பதற்கு இணங்க, முதலமைச்சர் விஜய் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்று வருகிறார் என தவெக தெரிவித்துள்ளது.

மின்வெட்டு.. எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் தொடர் மின்வெட்டு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.எல்.ஏ விஜய் தாமுவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தையில் கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என எம்.எல்.ஏ விஜய் தாமு உறுதியளித்துள்ளார்.

விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை அமைச்சர்

விஜய் தமிழன் பார்த்திபனுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் சேலம் தெற்கு தொகுதியில் 91371 வாக்குகள் பெற்றவர். 50 வயதான இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பணியை தொடங்கியவர்.

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

ஏ.எம்.ஷாஜகான் - சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு

வன்னி அரசு - சமூகநீதித் துறை ஒதுக்கீடு

தவெகவிற்கு `முதல்’ எம்.பி

மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-ஆக வெற்றிபெற்று ராஜ்யசபா எம்.பி பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால், அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்துக்கு ஜூன் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 107 எம்.எல்.ஏ-க்களை பெற்றுள்ள த.வெ.கவுக்கு முதல் எம்.பி கிடைக்க வாய்ப்புள்ளது.

சொன்னதை செய்துள்ளோம் - விஜய்

ஆட்சியில் பங்கு, சொன்னதை செய்துள்ளோம். ஆட்சியில் பங்கு என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. த.வெ.க ஜனநாயக ஆட்சியில் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். இது எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் புரட்சிகர நகர்வு. விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதை, செயலாக மாற்றம் என விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 8 அமைச்சர்கள்

எழும்பூர் (தனி) ராஜ்மோகன், அவிநாசி (தனி) கமலி, அரக்கோணம் (தனி) காந்திராஜ், ஒட்டப்பிடாரம் (தனி) மதன், ராசிபுரம் (தனி) லோகேஷ், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தென்னரசு, திண்டிவனம் (தனி) விசிக எம்எல்ஏ வன்னிஅரசு, பொதுத்தொகுதியில் வென்ற காங். எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகிய பட்டியல் சமூகத்தை சேர்ந்த 8 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாபநாசம் IUML எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்பு

பாபநாசம் ஐ.யு.எம்.எல் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பதவியேற்றார். முதல்முறையாக தமிழக அமைச்சரவையில் ஐ.யு.எம்.எல் இடம்பெற்றுள்ளது.

விசிக எம்எல்ஏ வன்னிஅரசு அமைச்சராக பதவியேற்பு

திண்டிவனம் வி.சி.க எம்.எல்.ஏ வன்னிஅரசு அமைச்சராக பதவியேற்றார். தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக விசிக அமைச்சர் பதவியேற்பு.

ஆளுநர் விழாவில் 3வது முறையாக வந்தே மாதரம் முதலில் பாடல்

CM விஜய் அமைச்சரவை 2வது முறையாக விரிவாக்கம். ஆளுநர் விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல், 2வதாக தேசிய கீதம் பாடல், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலித்தது.