📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 26, 2026 11:04 AM

டெல்லியை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்.!! பாதிப்பு எண்ணிக்கை 3,000

டெல்லியை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்.!! பாதிப்பு எண்ணிக்கை 3,000

டெல்லியை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல்.!! பாதிப்பு எண்ணிக்கை 3,000-ஆக உயர்வு...

டெல்லி: தலைநகர் டெல்லியில சுமார் 2,300 பேருக்கு H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை தடுக்க டெல்லி அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,308-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. இந்த காய்ச்சல் பரவும் நிலைமையை சமாளிக்க டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மருத்துவத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பன்றிக்காய்ச்சல் பதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக்கவசம் அணியவும், தனிநபர் சுகாதாரத்தைப் பேணவும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே போதுமான படுக்கைகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இருப்பதாகவும், அரசு முழுமையாக தயாராக இருப்பதாகவும் டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், தவறாமல் மருத்துவர்களை அணுகுமாறு டெல்லியில் வசிக்கும் மக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். டெல்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 229-ஆக இருந்த H1N1 பாதிப்பு, இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பருவமழை மற்றும் காலநிலை மாற்றமே இந்த காய்ச்சல் பாதிப்பு 6 மடங்கு அதிகரிக்க முதன்மை காரணமாகும் என்று சுகாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.