📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 02, 2026 12:04 PM

தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்; ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பு

தாராபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்; ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பு

தாராபுரம்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளரை ஆதரித்து தாராபுரம் அமராவதி சிலையில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்தார்.

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க., நா.த.க., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் உள்ள 320 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வரும் 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இன்று (அக் 02) திமுக வேட்பாளரை சுகன்யாவை ஆதரித்து தாராபுரம் அமராவதி சிலையில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்தார். அவர் மக்களிடம் ஓட்டு சேகரிக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு மாருதி நகர் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் பேசுகிறார்.