Thalaivar 173: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயர் வெளியானது
Thalaivar 173: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயர் வெளியானது
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகிவிட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்மிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பும் ரஜினி இணையும் படத்தின் இயக்குனர் யார் என்பதும், இந்த படத்தின் பெயரும் தற்போது வெளியாகியுள்ளது. ஊடகத்தில் சமீபத்தில் கசிந்த செய்திகளை உண்மையாகும் வகையில் தலைவர் 173 படத்தை இயக்கப்போவது அஸ்வத் மாரிமுத்து என்பதை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் பெயர் 'தர்மன்' எனவும் தயாரிப்பாளர் தரப்பு போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இளம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்த முற்றிலும் வித்தியாசமாக ஒரு மாறுபட்ட ஆக்ஷன் ஹீரோவாக காட்ட போகிறார் என்பதை படத்தின் போஸ்டர் வெளிக்காட்டுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தர்மமே வெல்லும்!#Dharman #Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav @kabilanchelliah @ShruthiManjari… pic.twitter.com/UWjXErKdIE
பிரபல இயக்குனரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, இப்படத்தின் முதல் காட்சியாக ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில் உருவாகும் இப்பாடல் காட்சிகளில் ரஜினிகாந்த் தற்பொழுது பங்கேற்கவில்லை; அவர் இல்லாத பிற முக்கிய காட்சிகள் மட்டுமே தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நேரடியாகப் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைத்தவுடன், அவரது காட்சிகளை மிகவும் விரைவாக எடுத்து முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளார். படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.