📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 22, 2026 09:34 AM

The Hundred 2026: காவ்யா மாறனுக்கு ஆரம்பமே சோகம்.. எளிதில் வென்ற எம்ஐ லண்டன்

The Hundred 2026: காவ்யா மாறனுக்கு ஆரம்பமே சோகம்.. எளிதில் வென்ற எம்ஐ லண்டன்

The Hundred 2026: காவ்யா மாறனுக்கு ஆரம்பமே சோகம்.. எளிதில் வென்ற எம்ஐ லண்டன்

லண்டன்: தி ஹண்ட்ரட் ஆடவர் கிரிக்கெட் தொடரின் சாம் கரனின் அபோர ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எம்ஐ லண்டன் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய எம்ஐ லண்டன் அணி, 16 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது.

சாம் கரன் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முன்னதாக, சன்ரைசர்ஸ் அணியின் பிரைடன் கார்ஸ் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். எனினும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம் கரன் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஜோடி வெறும் 40 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

அதிரடியாக விளையாடிய பூரன், வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் தனது ஆட்டமிழக்காத 58 ரன்களில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். முன்னதாக, முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 99 பந்துகளில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் அசத்திய எம்ஐ லண்டன் அணியின் ரிச்சர்ட் க்ளீசன் 25 ரன்களை மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளையும், சாம் கரன் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 41 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு ரன் வேகம் கணிசமாகக் குறைந்தது. இறுதியில் டாம் ஆல்சாப் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் 8 ரன்களிலும், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் சாக் க்ராலி 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தி ஹண்ட்ரட் தொடரில் ஐபிஎல் அணிகள் முதலீட்டிற்கு முன்பு 'ஓவல் இன்வின்சிபிள்ஸ்' என்று அழைக்கப்பட்ட எம்ஐ லண்டன் அணி, கடந்த மூன்று ஆடவர் தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கு முன்னதாக மகளிர் ஹண்ட்ரட் தொடர் தொடங்கியது. இதில் எம்ஐ லண்டன் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது.