📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 31, 2026 04:30 AM

தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகள்

தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகள்

தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ்மொழிப் போட்டிகளுக்கு இண்டியன்.எஸ்ஜி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடம் 5ஆம் மாடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 10 மணிக்குப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பாலர் வகுப்பு 1, 2 மாணவர்களுக்கு ‘என் சிங்கப்பூர்’ வண்ணந்தீட்டும் போட்டி நடைபெறும். மாணவர்கள் மெழுகுவண்ணம், வண்ணப் பென்சிலும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தொடக்கநிலை 1, 2, 3 மாணவர்களுக்கு ‘ஒரு நிமிடம் பேசலாமா?’ எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி இடம்பெறுகிறது. பிறருக்கு உதவுவது, இன நல்லிணக்கம், சுத்தமான சூழல் ஆகிய மூன்று தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்கள் பேச்சுத் தமிழிலோ, உரைநடைத் தமிழிலோ உரையாற்றலாம்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் www.indian.sg என்ற இணையப்பக்கம்வழி முன்பதிவு செய்ய வேண்டும்.