தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - சிறந்த தமிழ் படமாக 'ராயன்' தேர்வு
நடிகர் கார்த்திக்கின் 'மெய்யழகன்' திரைப்படத்திற்கும், நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Published : July 18, 2026 at 6:21 PM IST
Updated : July 18, 2026 at 7:01 PM IST
புதுடெல்லி: சிறந்த தமிழ் படத்துக்கான விருது நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இன்று (ஜூலை 18) மாலை செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட விருது தேர்வுக் குழுவினர், மொழி வாரியாக சிறந்த கதாநாயகன், கதாநாயகி, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த திரைப்படம் போன்ற பல்வேறு பிரிவுகளில் தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர்.
அதன்படி, சிறந்த திரைப்பட விமர்சகர் விருது சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறும்படங்களில் சிறந்த ஒலி அமைப்புக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த ஹரிஹரசுதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப்படமாக இந்தியில் வெளியான 'ராம் நாமி'யும், மராத்தியில் 'பங்கார்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. 30 நிமிடங்கள் வரையிலான சிறந்த குறும்படத்திற்கான விருது மராத்தி மொழியில் வெளியான ஹம்சஃபார் (Hamsafar) தேர்வுச் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களுக்கு சிறப்பு விருதுகள்
நடிகர் கார்த்தியின் 'மெய்யழகன்' திரைப்படத்திற்கும், நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருது 'ராயன்'க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்க, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிறந்த ஒலிக்கலவைக்கான விருது 'மெய்யழகன்' படத்தில் பணியாற்றிய சுரேன் ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி இசைக்கான விருது அமரன் படத்திற்காக ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த திரைப்பட எடிட்டருக்கான விருது அமரன் படத்திற்காக கலைவாணனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.