📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 02, 2026 08:00 PM

தேர்வு குளறுபடி எதிரொலி; சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்

தேர்வு குளறுபடி எதிரொலி; சிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்

புதுடில்லி: சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி தொடர்பான விவகாரத்தில் முறைகேடுகளை கண்டறிய குழு அமைத்துள்ள மத்திய அரசு, சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலரை இடமாற்றம் செய்துள்ளது.

சிபிஎஸ்இ , பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை இந்த முறை மதிப்பீட்டிற்காக டிஜிட்டல் முறையில் பதிவேற்றி உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக ஓஎஸ்எம் எனப்படும் கணினி திரைவழி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த நடைமுறையில் தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விடைத்தாள் தெளிவாக தெரியவில்லை. சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த குற்றச்சாட்டை சிபிஎஸ்இ ஒப்புக் கொண்டுள்ளது. தொழில்நுட்பங்களை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், கோயம்ப்ட் நி றுவுனத்திற்கு வழங்கப்பட்டது தொடர்பாக கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ இடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டது.

இந்நிலையில், இந்த குளறுபடி தொடர்பாக சிபிஎஸ்இ தலைலவர் ராகுல் சிங் மற்றும் செயலாளரை மத்திய கல்வி அமைச்சகம் இடமாற்றம் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் குழுவை மத்திய அ ரசு அமைத்துள்ளது. ராகுல் சவுஹான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி இக்குழு தனது அறிக்கையை ஒரு மாதத்தில் அளிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.