திமுக மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு; நிர்வாகிகளுக்கு வயது உச்சவரம்பு; செயற்குழுவில் தீர்மானம்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை, 110 ஆக அதிகரிப்பு; மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு உட்பட 9 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சி பணிகளை விரைவுப்படுத்தவும், கட்சியின் அமைப்பு ரீதியாக தற்போதுள்ள மாவட்டங்களை பிரிக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது. தி.மு.க.,வில், தற்போது, 77 மாவட்ட செயலர்கள் உள்ளனர். இரண்டு அல்லது மூன்று சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, ஒரு மாவட்டம் என பிரித்தால், மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை, 117 ஆக உயரும்.
புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்படுவதன் வாயிலாக, மாவட்ட செயலர்கள் பதவியில், இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக உருவாகும் மாவட்ட செயலர்கள் பதவிக்கு போட்டி இருந்தால், தேர்தல் நடத்தி தேர்வு செய்ய, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
ஆனால், தேர்தல் நடத்தி, மாவட்ட செயலர்களை தேர்வு செய்தால், மீண்டும் கோஷ்டி பூசல் தலையெடுக்கும் என்பதால், இளைஞரணி நிர்வாகிகளை, மாவட்டச் செயலர்களாக நியமிக்க, உதயநிதி தரப்பு விரும்புகிறது. இதனால், தி.மு.க, மாவட்ட செயலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தலாமா அல்லது நேரடியாக நியமிக்கலாமா என்ற குழப்பம், கட்சியில் உருவாகி உள்ளது.
இந்நிலையில், தி.மு.க., செயற்குழுக் கூட்டம், சென்னையில், கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இன்று நடந்தது. திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை, 110 ஆக அதிகரிப்பு; மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு உட்பட 9 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வயது உச்ச வரம்பு
* கிளை செயலாளர்களுக்கு - 45
* வட்டச் செயலாளர்களுக்கு- 50
* ஒன்றிய செயலாளர்களுக்கு- 60
* மாவட்ட செயலாளர்களுக்கு- 70
ஒரு பொறுப்பில் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இருக்க முடியும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பதவி பறிபோகுமா!
1.எ.வ.வேலு - திருவண்ணாமலை தெற்கு
2.செஞ்சி மஸ்தான் - விழுப்புரம் வடக்கு
3.ஆர்.காந்தி - ராணிப்பேட்டை
4.சுந்தர் - காஞ்சிபுரம் தெற்கு
5.எஸ்.ஆர்.சிவலிங்கம் - சேலம் கிழக்கு
6.முத்துசாமி -ஈரோடு தெற்கு
7.சாக்கோட்டை அன்பழகன் - தஞ்சாவூர் வடக்கு
8.ரகுபதி - புதுக்கோட்டை தெற்கு
9.தளபதி - மதுரை மாநகர்
10.ராமகிருஷ்ணன் - தேனி தெற்கு
11.ஆவுடையப்பன் - திருநெல்வேலி கிழக்கு
12.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - விருதுநகர் தெற்கு
13.அனிதா ராதாகிருஷ்ணன் - துாத்துக்குடி தெற்கு
அந்த பதவிக்கு மட்டும் இல்லை!
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; என்னென்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்