📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 02, 2026 07:04 AM

திமுக நிர்வாகம் மறு சீரமைப்பு; பின்னணியில் 'நால்வர் அணி'

திமுக நிர்வாகம் மறு சீரமைப்பு; பின்னணியில் 'நால்வர் அணி'

- நமது நிருபர் -

தி.மு.க.,வில், மறு சீரமைப்பு பணிக்கு 38 வருவாய் மாவட்டங்களுக்கு, தலா இருவர் வீதம், 76 தலைமை கழக பிரதிநிதிகள் நியமன பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களை, ஸ்டாலின் தலைமையிலான நால்வர் அணி தேர்வு செய்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அறிவாலயத்தில், ஆக., 22ல் நடந்த, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கட்சியில் அமைப்புரீதியாக உள்ள 77 மாவட்டங்களை, 110 மாவட்டங்களாக பிரித்து, சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்தி ற்கும் இருவர் வீதம், 76 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி, துணை பொதுச்செயலர் கனிமொழி, ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் தேர்வு செய்துள்ளனர்.

நியமிக்கப்பட்ட 76 பிரதிநிதிகள், தங்கள் மாவட்டத்தில், மாவட்ட செயலர்கள், மாவட்ட செயற்குழு கூட்டங்களை நடத்தி, புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதாவது, வரும் 15 நாட்களுக்குள், தொகுதிவாரியாக, நகரம், ஒன்றியம், பேரூர், வட்ட, கிளை அமைப்புகளை பிரிக்க, பரிந்துரைகள் வழங்க வேண்டும்.

இதுகுறித்து ஆலோசிக்கவும், விவாதிக்கவும், இன்று மாலை 5:00 மணிக்கு, ஸ்டாலின் தலைமையில், 76 பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நடக்க உள்ளது.

பிரதிநிதிகள் தேர்வு பட்டியலில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, விவசாய, தொழிலாளர்கள் அணி செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான அன்னியூர் சிவா, இளைஞரணி மாநில துணைச் செயலர் அப்துல் மாலிக்; சென்னை மாவட்டத்திற்கு, ராஜ்யசபா எம்.பி., கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.எல்.ஏ., ஆஸ்டின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரை, கோவி.லெனின்; காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, மருதுகணேஷ், ராணி ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி நலன் புதிதாக நியமிக்கப் பட்ட 76 பிரதிநிதிகளில், ஆறு எம்.பி.,க்கள், ஐந்து முன்னாள் எம்.பி.,க்கள், ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள், 11 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மகளிரணியை சேர்ந்த 6 பேர், இளைஞரணியை சேர்ந்த 5 பேர் என, அனைத்து அணி களின் மாநில நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் கட்சி நலன் கருதி செயல்படுவர் என்ற நம்பிக்கையில், நால்வர் அணி அவர்களை நியமித்துள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.