📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 29, 2026 08:04 AM

திமுக போட்ட பிச்சையால்தான் தவெக ஆட்சி அமைக்க முடிந்தது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக போட்ட பிச்சையால்தான் தவெக ஆட்சி அமைக்க முடிந்தது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக போட்ட பிச்சையால்தான் தவெக ஆட்சி அமைக்க முடிந்தது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு: திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவில் நடக்கும் ஆட்சிதான் தவெக ஆட்சி. திமுக போட்ட பிச்சையால்தான் தவெக ஆட்சி அமைக்க முடிந்தது' என மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; "இந்த எழுச்சியான கூட்டத்தை பார்க்கும்போது மதுராந்தகம் தொகுதி நாம் வெற்றி பெறும் தொகுதியாக மாறும் என உறுதியாக இருக்கிறது. தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் நான் சென்றபோது 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்பது உறுதியானது. ஆனால் அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் மதுராந்தகத்தில் வெற்றி பெற வேண்டும்.

இதே நாளில் கடந்த ஆண்டு கரூரில் 40 உயிர்கள் பறிபோனது. ஆனால் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆறுதல் கூட சொல்லாமல் குற்ற உணர்ச்சி இல்லாமல் மனசாட்சி இல்லாமல் மக்களை ஏமாற்றி முதலமைச்சர் ஆகிவிட்டார். அவரால் ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்க முடியாது. தற்போது இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலில் ஏன் நடந்தது என்பதை நாம் மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த கரகாட்ட கோஷ்டி ஜெயிச்சது 107 சட்டமன்ற உறுப்பினர்கள் தான்.

நாம் போட்ட பிச்சையால் தான் இந்த ஆட்சி நடக்கிறது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் நமது கூட்டணியில் இருந்து விட்டு நமது ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குகளை பெற்று அதில் வெற்றி பெற்று இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கின்றனர். பல்வேறு கட்சிகளுக்கு அவர்கள் சோபா அனுப்பினர். சோபாவில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியாது. அதிமுகவை இரண்டாக உடைத்தனர்.

வெற்றி பெற்ற 12 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு இந்த தொகுதியின் ஆளுநர் கட்சி வேட்பாளராக ஒருவர் உங்களிடம் ஓட்டு கேட்டு வருவார். இந்த முறை நீங்கள் ஏமாறாதீர்கள் நாங்கள் தற்போது நல்ல ஒரு வேட்பாளரை உங்களிடம் ஒப்படைத்துள்ளோம். எனக்கு துணையாக அவரை சட்டமன்றத்துக்கு அனுப்பி வையுங்கள் இப்பொழுது உள்ள அமைச்சர்களுக்கு தங்களது துறையைப் பற்றியும் தெரியவில்லை கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தெரியவில்லை.

கொடுத்த வாக்குறுதிகளையும் இந்த 120 நாட்களில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டி இருக்கிறது. 120 நாட்களில் 500 கொலைகள் நடந்துள்ளன. ஆகவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மதுராந்தகத்தில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, த.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், எம்.பிக்கள் செல்வம், கதிர் ஆனந்த், முன்னாள் எம். எல்.ஏ.க்கள் எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, இதயவர்மன், இ.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.