📅 Tuesday, 17 November 2026 IST | கார்த்திகை 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 10, 2026 09:00 PM

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் பெஞ்சமின். 1988ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய அதிமுக செயலாளராக பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 10) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பெஞ்சமின் சென்னை மாநகராட்சி கவுன்சிலர், துணை மேயராகவும் பணியாற்றியவர். 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவர், அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். 2021 தேர்தல் மற்றும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.