தினம் பொய் செய்தி பரப்புவதே வேலை.. திமுக, அதிமுகவை வகுந்தெடுத்த தவெக.. ஸ்டாலினுக்கும்
தினம் பொய் செய்தி பரப்புவதே வேலை.. திமுக, அதிமுகவை வகுந்தெடுத்த தவெக.. ஸ்டாலினுக்கும் அட்வைஸ்!
மக்களின் பேராதரவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசின் மீது ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டையோ, நிர்வாக ரீதியான குறையையோ முன்வைக்க முடியாத கோழைகள், தனிமனித தாக்குதல்கள், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள் என அரசியல் செய்து வருகின்றது.
கடந்த 5 மாதங்களாக தவெக ஆட்சி அமைத்த நாளில் இருந்து திமுகவும், அதிமுகவும் தினமும் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக தமிழக வெற்றிக் கழகம் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
5 மாதங்களை நிறைவு செய்யும் தமிழக வெற்றிக் கழக அரசு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 5 மாதங்கள் நிறைவடைய உள்ளது. இதனிடையே திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதற்கு பதிலடியும், விளக்கமும் தவெக சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் நேற்றைய தினம் மதுரை கள்ளழகர் கோயில் பெயர் பலகையில் தமிழ் பெயர் நீக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் பரவியது. அதேசமயம் கரூர், கோவை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருந்து கவரில் இந்தி மொழியும் இடம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கள்ளழகர் கோயில் விவகாரம் போலி புகைப்படம் எனவும், மருந்து கவர் திமுக ஆட்சியில் அச்சிடப்பட்டது எனவும் தமிழக அரசு விளக்கம் கொடுத்தது.
இந்த நிலையில் தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், “தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் இன்று வரை, தினந்தோறும் பொய்யான செய்திகளைப் பரப்புவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.
மக்களின் பேராதரவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசின் மீது ஆக்கப்பூர்வமான குற்றச்சாட்டையோ, நிர்வாக ரீதியான குறையையோ முன்வைக்க முடியாத கோழைகள், தனிமனித தாக்குதல்கள், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகள், அவதூறுகள், கட்டுக்கதைகள் என கீழ்த்தரமான அரசியலைச் செய்து வருகின்றனர்.சில முன்னணி ஊடகங்கள் முதல் சமூக வலைத்தளப் பக்கங்கள் வரை, சொல்லி வைத்தது போல பரப்பும் ஒரே பொய்களை, ஒரே கதைகளை, ஒரே கதைகளை, கொள்கைக் கூட்டணி முறிந்தவுடன் தீயசக்தியும் மற்றும் பலரும் கொல்லைப்புறக் கூட்டணி போட்டு தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஒரே வாட்ஸ்அப் குழுவில் இயங்குவதால் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ஆவதும், எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினும் ஆவதும் மாறி மாறி நடந்துகொண்டே இருப்பதால்தான், கொல்லைப்புறக் கூட்டணியினர்,
காலையில் எழுந்ததும் ஒரு பொய். மதியம் ஒரு கட்டுக்கதை. மாலையில் ஒரு பிரேக்கிங் நியூஸ். இரவு அதே பொய்க்கு பிரத்யேக உரையாடல் என ஷெட்யூல் போட்டு பொய்களைப் பரப்பி வருகின்றனர். தவெக ஆட்சி அமைவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, பொய் பரப்புவதை மட்டும் மாற்றவில்லை இந்தப் பொய்யர்கள்.
இந்தக் கேவலமான அரசியலைச் செய்து கொண்டுதான், எங்களுக்கு 70 ஆண்டுகால வரலாறு, 50 ஆண்டுகால வரலாறு என்று பெருமைக்கு எருமை மேய்த்துக் கொண்டிருக்கின்றனர். டிஜிட்டல் யுகத்திலேயே இவ்வளவு பொய்களைப் புனையும் தரங்கெட்ட கூட்டம், சமூக வலைத்தளம் இல்லாத காலத்தில் நம் முன்னோர்களைப் பற்றி எத்தனை கட்டுமரக் கதைகளைப் புனைந்து மக்களை ஏமாற்றியிருப்பார்கள்? இப்படி கட்டுமரக் கதைகள் கட்டித்தான் போலிப் பிம்பங்களை தலைவர்கள் என நம் தலையில் கட்டியிருக்கிறார்கள்.
இனி பழைய வரலாறுகள் தூசித் தட்டப்பட்டு, பொய்களால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பங்களும் முகமூடிகளும் ஒவ்வொன்றாக மக்களின் மன்றத்தில் கிழித்துத் தொங்கவிடப்படும் என்பதை ஸ்வீட் அங்கிளுக்கு அன்பாக, க்யூட்டாகச் சொல்லிக் கொள்கிறோம். அப்புறம் ஸ்வீட் அங்கிள்… அந்த கைது ஆணை நகல் கிடைத்துவிட்டதா?பொறுமையாகத் தேடுங்கள். அவசரமே இல்லை. உண்மை எங்கும் ஓடிவிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி