📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology June 22, 2026 02:01 AM

தினமலர் செய்தி எதிரொலி; நெல் மூட்டைகள் மழையில் சேதமாகும் பிரச்னை இனி இருக்காது என அமைச்சர் உறுதி

தினமலர் செய்தி எதிரொலி; நெல் மூட்டைகள் மழையில் சேதமாகும் பிரச்னை இனி இருக்காது என அமைச்சர் உறுதி

தஞ்சாவூர்: ''தமிழகம் முழுதும் நெல் மூட்டைகள் மழையில் பாதிக்காத வகையில், எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்னைகள் இருக்காது,'' என, வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

கும்பகோணம் பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், மழையால் பாதித்த நெல் மூட்டைகள் பற்றி தினமலர் நாளிதழில் இன்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, வேளாண் துறை அமைச்சர் வினோத், பாதிக்கப்பட்ட கிடங்கை ஆய்வு செய்தார்.

பிறகு, அமைச்சர் வினோத் கூறியதாவது: திறந்தவெளி சேமிப்பு கிடங்கில், 600 நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. இருப்பில் உள்ள நெல் மூட்டைகள் அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இனி மழையில் நெல் மூட்டைகள் பாதிக்காத வகையில், எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்னைகள் இருக்காது; அதற்கான ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

திறந்தவெளி கிடங்குகளை மூடப்பட்ட கிடங்குகளாக அமைப்பதற்கு குறைந்தது ஆறு மாதமாகும். மழைக்கு முன் தற்போது தற்காலிகமாக நெல் கிடங்குகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.நெல் சேதமடைந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.