📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 07, 2026 07:31 AM

திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்

திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்

திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்

ஆகஸ்ட் 7-ல் திரையரங்குகளில் மாதவனின் GTDN, லோகேஷ் கனகராஜின் DC வெளியாகின்றன. ஓடிடியில் சசிகுமாரின் வதந்தி 2 ஸ்ட்ரீமிங் ஆகிறது.

ஆகஸ்ட் 7 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முக்கியமான நாளாக அமைய உள்ளது. ஒருபுறம் திரையரங்குகளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் நிலையில், மறுபுறம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெப் தொடரின் இரண்டாவது சீசனும் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால் திரையரங்க ரசிகர்களுக்கும், ஓடிடி ரசிகர்களுக்கும் ஒரே நாளில் பல்வேறு தேர்வுகள் கிடைத்துள்ளன.

ஜிடிஎன் , டிசி

இந்த வாரத்தின் முக்கிய திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாக ஆர். மாதவன் நடித்துள்ள 'GDN' திரைப்படம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகவும், தொழில்முனைவோர், விஞ்ஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வாழ்க்கை வரலாற்றுப் படம் இதுவாகும். 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். பிரியாமணி, சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், வினய் ராய், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தை மாதவன், சரிதா மாதவன், விஜய் மூலன் மற்றும் வர்கீஸ் மூலன் இணைந்து தயாரித்துள்ளனர்.

அதேபோல், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் 'DC' திரைப்படமும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் ஆக்ஷன்-கிரைம் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜின் முதல் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் திரைப்படமாக வெளியாகிறது.

ஓடிடியி வெளியாகும் வதந்தி 2

திரையரங்கு வெளியீடுகளுடன் சேர்த்து, ஓடிடி ரசிகர்களுக்கும் முக்கிய விருந்தாக சசிகுமார் நடித்த 'வதந்தி 2' வெளியாகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த புதிய சீசன், மர்மம் மற்றும் குற்றப்பின்னணியை மையமாகக் கொண்ட த்ரில்லர் தொடராக வெளியாகிறது. சசிகுமார் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடர், ஆகஸ்ட் 7 முதல் அதன் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

ஒரே நாளில் இரண்டு முக்கிய திரையரங்கு வெளியீடுகளும், ஒரு பெரிய ஓடிடி வெளியீடும் வருவதால், இந்த வார இறுதி தமிழ் பொழுதுபோக்கு ரசிகர்களுக்கு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாதவனின் 'GTDN', லோகேஷ் கனகராஜின் 'DC' மற்றும் சசிகுமாரின் 'வதந்தி 2' ஆகிய மூன்று வெளியீடுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி