📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 16, 2026 03:34 AM

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்.. தடுக்க முயன்ற பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்.. தடுக்க முயன்ற பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வீடு புகுந்து இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் நிறுத்தம்

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வர்ஷா என்பவருக்கும் அவரது உறவினர் யுவராஜாவிற்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யுவராஜாவை வர்ஷா மணம் முடிக்க மறுத்துவிட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் தன்னை திருமணம் செய்ய மறுத்த வர்ஷாவை வீடு புகுந்து யுவராஜா இன்று வெட்டியதாக கூறப்படுகிறது.

தாயார் வெட்டி கொலை

மகள் வெட்டப்படுவதை பார்த்து அதனை தடுக்க வந்த வர்ஷாவின் தாய் விநாயக ஜோதி மீதும் யுவராஜா கொடூரமாக அரிவாளால் வெட்டியதில் வர்ஷாவின் தாயார் விநாயக ஜோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

யுவராஜால் அரிவாளால் வெட்டப்பட்ட வர்ஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய யுவராஜ், மல்லாங்கிணறு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.