திருமணம் எல்லாம் வேண்டாம்.. தனுஷ்
சென்னை: தனுஷும், மிருணாள் தாகூரும் காதலித்துவருவதாக தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. ஆனால் அதனை மிருணாள் ஒரு பேட்டியில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவர் அப்படி சொல்லியும் அதனை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை. தான் தனுஷை காதலிக்கவே இல்லை என அவர் சொல்லிய சூழலில்; இப்போதோ அவர்கள் இரண்டு பேருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாக புதிய தகவல் வட்டமடிக்க தொடங்கியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் விழுந்த சிறு கீறல்; தொடர்ந்து விரிசலாக மாறி அவர்களை பிரியும் நிலைமைக்கு கொண்டு சென்றது. அதனையடுத்து சட்டப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். மகன்களை கோ பேரண்ட்டிங் மூலம் வளர்த்துவருகிறார்கள். தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விவாகரத்துகளில் இதுவும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.
மிருணாள் தாகூருடன்: ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்றும்; உறவுக்கார பெண் ஒருவரை பார்த்திருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. ஆனால் அதிலெல்லாம் உண்மையில்லை. நடிகை மிருணாள் தாகூரும், தனுஷும் காதலித்துவருகிறார்கள். அவர்கள் அடிக்கடி டேட்டிங்கும் செல்கிறார்கள் என்றும் பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்தன.
வெளியான புகைப்படங்கள்: அதுகுறித்து இரண்டு பேரும் அமைதியாகவே இருந்தார்கள். மேலும், பார்ட்டிகளில் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்திருக்கும் ஃபோட்டோக்களும் வெளியாகி இந்தப் பேச்சுக்களுக்கு சலங்கை கட்டிவிட்டன. அதுமட்டுமின்றி தனுஷின் சகோதரிகளை மிருணாள் திடீரென இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ததை வைத்து; இரண்டு பேரும் ரிலேஷன்ஷிப்பில்தான் இருக்கிறார்கள் என்று உறுதியே செய்துவிட்டார்கள் பாலிவுட், கோலிவுட் ரசிகர்கள்.
மறுத்த மிருணாள்: தொடர்ந்து இதுகுறித்து தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்க; இனிமேலும் விட்டால் சரியாக இருக்காது என முடிவெடுத்த மிருணாள், 'தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் நானும், அவரும் காதலிக்கிறோம் என்பதில் உண்மையில்லை. பி.ஆர் வைத்து வரவேண்டிய விளம்பரங்கள் எல்லாம் இந்த விவகாரத்தில் எனக்கு வந்துவிட்டது' என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரேக் அப் செய்துகொண்ட ஜோடி?: அவர் அப்படி சொல்லியும் அதை நம்புவதற்கு பலரும் தயாராக இல்லை. இப்போதைக்கு சும்மா அவர் சொல்லியிருக்கிறார் என கூறினார்கள் ரசிகர்கள்.இந்நிலையில் அவர்கள் குறித்து புதிய தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதாவது, இரண்டு பேரும் தங்களது உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து; இனிமேல் நாம் பிரிந்துவிடலாம் என சொல்லி பிரிந்துவிட்டார்களாம். தற்போது இந்த விவகாரம்தான் திரைத்துறையில் புகைய தொடங்கியிருக்கிறது.